வாழைக்காய் பச்சடி செய்வது | Banana Pachadi Recipe !





வாழைக்காய் பச்சடி செய்வது | Banana Pachadi Recipe !

0
தேவையானவை:
துவரம் பருப்பு – அரை கப்,

வாழைக்காய் – 1,

பெரிய வெங்காயம் – 1,

தக்காளி – 3,

பச்சை மிளகாய் – 2,

சாம்பார் பொடி – 1 டீஸ்பூன்,

புளி – ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு,

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,

உப்பு – தேவைக்கு.

தாளிக்க:

கடுகு – அரை டீஸ்பூன்,

உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்,

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன். 

செய்முறை:
வாழைக்காய் பச்சடி செய்வது
துவரம் பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேக வையுங்கள். வாழைக்காய், வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்குங்கள்.

புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள்.

எண்ணெயைக் காய வைத்து, கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் ஆகிய வற்றை சேர்த்து நன்கு வதக்குங்கள்.

அத்துடன் வாழைக்காய், தக்காளி சேர்த்து, மேலும் நன்கு வதக்குங்கள். பிறகு, புளிக் கரைசல், வேக வைத்த பருப்பு, தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்குங்கள்.

வாழைக் காயில் ஒரு வித்தியாசமான, சுவையான சைட்-டிஷ்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)