வெஜிடபிள் ஆம்லெட் செய்வது | Vegetable Omelette Recipe !





வெஜிடபிள் ஆம்லெட் செய்வது | Vegetable Omelette Recipe !

0
தேவையானவை:

கடலைப் பருப்பு – 50 கிராம், 

துவரம் பருப்பு – 50 கிராம், 

பாசிப் பருப்பு – 50 கிராம், 

உளுந்து, முந்திரி, 

மக்காச்சோளம் – 50 கிராம், 

முழு கோதுமை – 50 கிராம்,

பச்சை மிளகாய் – 2,

பெரிய வெங்காயம் – 1,

கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகுத் தூள், உப்பு – சிறிதளவு.

செய்முறை:
வெஜிடபிள் ஆம்லெட் செய்வது

கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, உளுந்து, முந்திரி, மக்காச் சோளம், கோதுமை ஆகிய வற்றைத் தனித்தனி யாக வறுத்து, ரவை போல அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர், தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக் கொள்ள வேண்டும். 

இதனுடன், நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகுத் தூள், உப்பு சோத்து, ஆம்லெட் போல தோசைக் கல்லில் போட்டு எடுக்க வேண்டும்.

பலன்கள்:

கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, முந்திரி அனைத்துமே புரதச்சத்து நிறைந்தவை. மக்காச் சோளம், முழு கோதுமை போன்ற வற்றில் இருந்து நார்ச்சத்து கிடைக்கிறது.

பச்சை மிளகாய்,பெரிய வெங்காயம், கறிவேப்பிலை போன் றவற்றில் இருந்து நுண் ஊட்டச் சத்துக்களும், ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் கிடைக்கின்றன.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)