அவல் பொரி உருண்டை செய்வது | Flakes Frying Urundai Recipe !





அவல் பொரி உருண்டை செய்வது | Flakes Frying Urundai Recipe !

0
என்னென்ன தேவை?

அவல் பொரி – 4 கப்,

பாகுவெல்லம் – 1-1¼ கப் (துருவியது),

தண்ணீர் – 1/4 கப்,

தேங்காய் (பல் பல்லாக நறுக்கியது) அல்லது கொப்பரை – 1/4 கப்,

எள் – 1 டேபிள் ஸ்பூன்,

அரிசி மாவு – சிறிது,

நெய் – 1 டேபிள் ஸ்பூன்,

சுக்குத்தூள் – 1/4 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?
அவல் பொரி உருண்டை

வெறும் கடாயில் எள்ளை வறுத்து தனியே வைக்கவும். மற்றொரு கடாயில் சிறிது நெய் விட்டு தேங்காயை சிவக்க வறுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் வெல்லத்தூள், தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து கரைந்ததும் வடித்து, மீண்டும் கொதிக்க வைத்து பாகுபதத்திற்கு காய்ச்சவும். 

இத்துடன் அவல் பொரி, தேங்காய், சுக்குத்தூள், எள் சேர்த்து கிளறி இறக்கி,

அரிசி மாவை தொட்டு உருண்டைக ளாக பிடிக்கவும். ஆறியதும் படைத்து பரிமாறவும்.

குறிப்பு:

விரும்பினால் குழந்தைகளுக்காக டூட்டி ஃப்ரூட்டி சேர்த்தும் உருண்டைகள் பிடிக்கலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)