பாஸ்தா சீஸ் பால்ஸ் செய்வது | Pasta Cheese Balls Recipe !





பாஸ்தா சீஸ் பால்ஸ் செய்வது | Pasta Cheese Balls Recipe !

0
தேவையானவை

மக்ரோனி பாஸ்தா - 1 கப்

சீஸ் - 1/2 கப்

உருளைக்கிழங்கு - 1

குடை மிளகாய் - 2 டேபிள் ஸ்பூன்

பாஸ்தா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்

சில்லி ஃப்ளேக்ஸ் அல்லது மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்

மைதா மாவு - 2 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - பொரிப்பதற்கு

பிரெட் க்ரெம்ப்ஸ் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
பாஸ்தா சீஸ் பால்ஸ் செய்வது

முதலில் மக்ரோனி பாஸ்தாவை 5 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து தேவையான உப்பு சேர்த்து வேக வைத்து, வடிகட்டி கொள்ளவும். தண்ணீர் நன்கு வடிய வேண்டும். 

பின் உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் உரித்துக் கொள்ளவும் அகலமான பாத்திரத்தில், சீஸ், தக்காளி சாஸ் / பாஸ்தா சாஸ், மிளகாய் தூள் / சில்லி ஃப்ளேக்ஸ், உப்பு, நறுக்கிய குடை மிளகாய், ஒரிகானோ, மைதா மாவு மற்றும் மசித்த உருளைக் கிழங்கு சேர்க்கவும். 
வெந்த பாஸ்தாவை கைகளால் நன்கு மசித்துக் கொள்ளவும். எல்லா வற்றையும் ஒன்றாகச் சேர்த்து நன்றாக கைகளால் பிசையவும்.

சிறு உருண்டை களாக உருட்டி பிரெட் க்ரெம்ப்ஸில் புரட்டி எடுக்கவும். எஎண்ணெயை சூடாக்கி, மிதமான தீயில் வைத்து, உருண்டை களை பொன் நிறம் ஆகும் வரை வேக விட்டு பொரித்து எடுக்கவும். 

தீயை குறைத்து வைத்து பொரிக்கவும். சுவையான பாஸ்தா சீஸ் பால்ஸ் தயார்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)