பப்பாளி - கொய்யா - பேரீச்சை பிரியாணி செய்வது எப்படி?





பப்பாளி - கொய்யா - பேரீச்சை பிரியாணி செய்வது எப்படி?

0
பொதுவாகவே பழங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை மற்றும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். அந்த வகையில் கொய்யா, பொட்டாசியம், கார்போ ஹைட்ரேட், உணவு நார்ச்சத்து மற்றும் புரதம் போன்ற சத்துக்களை நிறைவாகக் கொண்டுள்ளது. 
பப்பாளி - கொய்யா - பேரீச்சை பிரியாணி செய்வது எப்படி?
இதனுடன் வைட்டமின் சி, வைட்டமின் பி6, கால்சியம், இரும்பு, மக்னீசியம் போன்ற சத்துக்களும் உள்ளன. நூறு கிராம் கொய்யாவில் சுமார் 300 மில்லி கிராம் அஸ்கார்பிக் அமிலம் அதாவது வைட்டமின்-சி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர, கொய்யாவில் ஏராளமான பைட்டோ நியூட்ரியன்கள் மற்றும் ஆன்டி- ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் தாதுக்கள் என ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். 
கொய்யாவின் பயன்பாடு பல வகையான உடல்நலப் பிரச்சனைகளை நீக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. குறிப்பாக வயிறு தொடர்பான பிரச்சனைகளை நீக்குவதில் கொய்யா நல்ல பங்கு வகிக்கிறது. 

வெயில் காலங்களை விட குளிர், காலங்களில் நம் உடலில் பலவித நோய் தொற்றுகள் உண்டாகும். அந்த வகையில், ஆரோக்கிய உணவுகளை குளிர் காலத்தில் எடுத்து கொண்டால் நோய் கிருமிகள் நம்மை அண்டாமல் தடுக்கலாம். 

குறிப்பாக வைட்டமின்கள், தாதுக்கள், நார்சத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற நம் உடலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் ஊட்டசத்துக்கள் நிறைந்தவற்றை சாப்பிட வேண்டும். 
இவை அனைத்துமே பேரீச்சம் பழத்தில் அதிகம் உள்ளன என மருத்துவர்கள் கூறுகின்றனர். சரி இனி கொய்யா பேரீச்சை பப்பாளி பயன்படுத்தி டேஸ்டியான பப்பாளி - கொய்யா - பேரீச்சை பிரியாணி செய்வது எப்படி? என்று இந்த பதிவில் கண்போம்.  

தேவையானவை:

பாசுமதி அரிசி - ஒரு கப்,

லெமன் ஃபுட் கலர் - சிறிதளவு,

நெய் - 3 டேபிள் ஸ்பூன்,

பால் - அரை கப்,

பால்கோவா - 100 கிராம்,

சர்க்கரை - அரை கப்,

உடைந்த பாதாம், முந்திரித் துண்டுகள் - 2 டேபிள் ஸ்பூன்,

ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை,

நறுக்கிய பப்பாளி, கொய்யா, விதை நீக்கிய பேரீச்சை (எல்லாம் சேர்த்து) - ஒரு கப்.
17 ஆண்டு மறைந்து இருந்த குற்றவாளி காட்டி கொடுத்த ட்ரோன் !
செய்முறை:
பப்பாளி - கொய்யா - பேரீச்சை பிரியாணி
பாசுமதி அரிசியை 15 நிமிடம் ஊற விடவும். அரை கப் சர்க்கரையில் ஒரு டேபிள் ஸ்பூன் நீர் விட்டு கம்பிப் பதத்தில் பாகு காய்ச்சவும். குக்கரில் அரை கப் பால், ஒரு கப் நீர் விட்டு அரிசியை சேர்த்து வேக விடவும்.

ஒரு விசில் வந்ததும் இறக்கி, ஆவி வெளியேறியதும் சர்க்கரைப் பாகு சேர்த்துக் கிளறி, பால்கோவா, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.

முந்திரி, பாதாமை நெய்யில் வறுத்து சேர்த்து மேலும் கிளறி, ஃபுட் கலர் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். சூடாக இருக்கும் போதே நறுக்கிய பழங்களைச் சேர்த்துக் கிளறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)