ஞாயிற்று கிழமைகளில் பொழுது போக்காக செய்து சாப்பிடலாம். இதில் கீரை சேர்க்கப் படுவதால் ஆரோக்கியம் மற்றும் ஊட்ட சத்துக்கள் நிறைத்தி ருக்கிறது.
ஸ்பினாச் அண்ட் ஃபெடா க்ரீப்ஸ் ரெசிபி
தேவையான பொருட்கள்

க்ரீப்ஸ் தயாரிக்க:

1/4 கப் பால்

1/2 கப் மாவு

1/3 கப் தண்ணீர்

1/8 கப் வெண்ணெய், உருகிய

1 தேக்கரண்டி தேன்

ஒரு சிட்டிகை உப்பு

1 மேஜைக் கரண்டி எண்ணெய்

வெண்ணெய்

ஃபில்லிங்:

200 கிராம் கீரை, நறுக்கப்பட்ட

150 கிராம் ஃபெடா சீஸ்

100 கிராம் க்ரீக் யோகர்ட்

2 மேஜைக் கரண்டி தேன்

எப்படி செய்வது 

மேற்கூறிய எல்லா பொருட்களை யும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளவும். காற்று, கட்டி இல்லாதவாறு நன்கு கலந்து கொள்ளவும்.

இதனை காற்று புகாதவாறு மூடி ஃப்ரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைக்கவும்.

ஒரு தட்டையான பேனை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் தடவவும்.

இதில் இரண்டு மேஜைக் கரண்டி கலந்து வைத்த மாவை ஊற்றி தோசை பதத்திற்கு வார்த்து எடுக்கவும்.

அந்த மாவின் மேல் கீரை மற்றும் சீஸ் கலவையை வைக்கவும். பாதியாக மூடி வேக வைக்கவும். பின் அதன் ஓரங்களில் வெண்ணெய் தடவி முறுகலாக சுட்டு எடுக்கவும்.

வெந்தபின் அதில் க்ரீக் யோகர்ட்டை மேலே வைத்து தேன் ஊற்றி அலங்கரித்து பரிமாறலாம்.