ஷேவிங் செய்த பின் மென்மையாக இருப்பது, ஷேவிங் க்ரீமைப் பொறுத்தது. ஷேவிங் க்ரீம் சரும வகைக்கு ஏற்றவாறு சரியானதாக இல்லா விட்டால், அதனால் அரிப்புக்கள் மற்றும் எரிச்சலை சந்திக்கக் கூடும். 
கெமிக்கல் ஏதும் இல்லாத அற்புதமான ஷேவிங் க்ரீம் வீட்டிலேயே செய்ய !
உங்களுக்கு பொறுமை இருந்தால், வீட்டிலேயே அற்புதமான ஷேவிங் க்ரீம்மை செய்து பயன்படுத்திப் பாருங்கள். வீட்டில் செய்யும் ஷேவிங் க்ரீம்மில் கெமிக்கல் ஏதும் இருக்காது. 
இதனால் சருமத்திற்கு எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது. அது மட்டுமின்றி, இயற்கை பொருட்களைக் கொண்டு செய்யும் ஷேவிங் க்ரீம்மால் சருமத்தின் ஆரோக்கியம் மேம்படும்.

இங்கு வீட்டிலேயே ஷேவிங் க்ரீம்மை எப்படி செய்வதென்று கொடுக்கப் பட்டுள்ளது.
கெமிக்கல் ஏதும் இல்லாத அற்புதமான ஷேவிங் க்ரீம் வீட்டிலேயே செய்ய !
அதைப் படித்து விடுமுறை நாட்களில் வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தி எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: 

* ஷியா வெண்ணெய் 

* தேங்காய் எண்ணெய் 

* ஆலிவ் ஆயில் 

* சில துளிகள் நறுமண எண்ணெய் 

* பேக்கிங் சோடா 

* வைட்டமின் ஈ கேப்ஸ்யூல்
முதலில் 2/3 கப் ஷியா வெண்ணெயை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அத்துடன் அதே அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து, வெண்ணெயை முற்றிலும் உருக விட வேண்டும். வெண்ணெய் உருகியதும் 

அடுப்பை அணைத்து விட வேண்டும். பின் 1/4 கப் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து, அத்துடன் சில துளிகள் லாவெண்டர் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
கெமிக்கல் ஏதும் இல்லாத அற்புதமான ஷேவிங் க்ரீம் வீட்டிலேயே செய்ய !
அடுத்து அந்த கலவையை ஒரு கொள்கலனில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் இறுகும் வரை வைத்து, பின் வெளியே எடுத்து அறை வெப்ப நிலையில் வைக்க வேண்டும்.

கலவையானது சற்று மென்மையான பின், அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 2 வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் சேர்த்து, பிளெண்டரில் போட்டு நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

பல ஆண்டுகளுக்கு முன் உடைந்த பனிக்கட்டி? 

இப்போது ஷேவிங் க்ரீம் தயாராகி விட்டது. பின் அதனை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்து, தேவையான போது பயன்படுத்திக் கொள்ளலாம். 

முக்கியமாக இந்த ஷேவிங் க்ரீம் ஒரு மாதம் அப்படியே இருக்கும். உங்களுக்கு முகத்தில் ஏதேனும் தழும்புகள் இருந்தால், யூகலிப்டஸ் அல்லது ரோஸ்மேரி எண்ணெயைப் பயன்படுத்த வேண்டாம்.