பார்பிக்யூ என்றால் என்ன? இது தெரியாம போச்சே !





பார்பிக்யூ என்றால் என்ன? இது தெரியாம போச்சே !

0

பார்பிக்யூ என்பது கரி மற்றும் மரத் துண்டுகளைக் கொண்டு மாமிசங்களை நேரடியாக நெருப்பு, வெப்ப அனல் மற்றும் புகைச்சலைக் கொண்டு சமைக்கப்படும் சமையல் முறையாகும்.

பார்பிக்யூ என்றால் என்ன? இது தெரியாம போச்சே !
முற்காலத்தில் சிறிய குடும்ப மற்றும் சமூகக் கூட்டங்களில் மட்டுமே பின்பற்றப்பட்டு வந்த இச்சமையல் முறையானது இப்போது பெரும்பாலான நடுத்தர மற்றும் உயர்தர உணவகங்களில் முக்கிய உணவாக உள்ளது.

முதற் காலங்களில் ஒரே ஒரு முறையில் மட்டும் சமைக்கப்பட்டு வந்த பார்பிக்யூவானது இப்பொழுது உலகெங்கும் பரவி அந்த நாட்டிற்கு தகுந்தார் போல் சமையல் முறையில் ஒரு சில மாற்றங்களை கண்டுள்ளது.

குருவையே அழ வைத்த சிஷ்யன்... ஆசிரியர் சின்னதுரை !

பார்பெக்யூயிங் சமையல் நுட்பங்களில் புகைத்தல், வறுத்தல் அல்லது பேக்கிங், பிரேசிங் மற்றும் கிரில்லிங் ஆகியவை அடங்கும். 

இவைகள் அனைத்தும் நேரத்தைப் பொருத்து மாறும்.இதில் புகைத்தல் (smoking) என்பது அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் சமையல் முறையாகும். 

பார்பிக்யூ என்றால் என்ன? இது தெரியாம போச்சே !

இம்முறையில் மிகக் குறைந்த வெப்பநிலையை கொண்டு வெப்ப புகையினால் இறைச்சியானது சமைக்கப் படுகிறது. பேக்கிங் முறையில் சராசரி வெப்ப நிலையில் மூடப்பட்ட சூழ்நிலையில் இறைச்சியானது சமைக்கப்படும்.

பிரேசிங் முறையில் இறைச்சியானது சராசரி வெப்ப நிலையில் உலர்ந்த சூழ்நிலையில் சமைக்கப்படும். க்ரில்லிங் முறையில் அதிக வெப்ப நிலையில் நேரடியான முறையில் சமைக்கப்படும்.

கடன் கொடுப்போரும் வாங்குவோரும் நடக்கும் முறைகள் !

பார்பிக்யூ (Barbecue) என்ற ஆங்கில வார்த்தையானது Barbacoa என்ற ஸ்பானிஷ் மொழி வார்த்தையிலிருந்து உருவானதாகும்.

கொன்சாலோ ஃபெர்னாண்டஸ் என்ற ஸ்பெயின் நாட்டுப் பயணி முதன் முறையாக barbacoa என்ற வார்த்தையை 1526 ஆம் ஆண்டு ராயல் ஸ்பானிய அகாடமி யின் ஸ்பானிஷ் மொழி அகராதியின் இரண்டாவது பதிப்பில் இந்த வார்த்தையை சேர்த்தார்.

பார்பிக்யூ என்றால் என்ன? இது தெரியாம போச்சே !
OED (ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதி)-ன் பதிவேட்டின் படி 1661 ம் ஆண்டு முதன் முறையாக Barbecue என்ற வார்த்தையானது முதன் முறையாக எட்மணட் ஹிக்கரின்கில் என்பவரால் பயன்படுத்தப் பட்டது என பதிவிடப் பட்டுள்ளது.

நத்தை கறி ருசி எப்படிப்பட்டது?

தொடக்க காலங்களில் பள்ளம் தோண்டி அதில் மாமிசங்களை வைத்து மேற்பகுதியில் மாகுவே (Maguey) எனும் தாவரத்தின் இலை யையும் மரக்கட்டைகளையும் வைத்து சமைக்கும் முறையை இருந்தது.

கரீபியன் தீவுகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த இந்த சமையல் முறையானது காலப்போக்கில் ஸ்பானிஷ், பிரெஞ்சு, போர்ச்சுகீஸ் மற்றும் ஆங்கில கலாச்சாரங்களில் இணைந்தது.

பார்பிக்யூ என்றால் என்ன? இது தெரியாம போச்சே !

ஆனால், இதில் பெரிய பிரச்சினை என்ன வென்றால் பார்பிக்யூவிற்காக 2017 ம் ஆண்டு பிரிட்டனில் மட்டும் சுமார் 90000 டன் கரிகள் பயன்படுத்தப் பட்டன.

இது அதற்கு முந்தைய ஆண்டை விட 27% அதிகமாகும். இந்த அதிக பட்சமான கரி தேவைக்காக நைஜீரியா நாட்டின் பல காடுகள் அழிக்கப் படுகின்றன.

நத்தை கறி சுத்தம் செய்வது எப்படி?

மேலும் ஐரோப்பிய நாடுகளின் கரி தேவைக்காக பராகுவே போன்ற தென் அமெரிக்க நாடுகளில் அதிக அளவில் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)