கோதுமை கேழ்வரகு ஆலு பரோட்டா செய்வது எப்படி?





கோதுமை கேழ்வரகு ஆலு பரோட்டா செய்வது எப்படி?

0
உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து அப்படியே சாப்பிட்டாலே பசியை போக்க வல்ல ஒரு உணவாக இருக்கிறது. இந்த உருளைக்கிழங்கு உலக மக்கள் அனைவரின் வரவேற்பை பெற்ற ஒரு உணவாக இருக்கிறது. 

அனைத்து வயதினராலும் எளிதாக செரிமானம் செய்யக்கூடிய ஒரு உணவுப் பொருளாக உருளைக்கிழங்கு இருக்கிறது. உருளைக்கிழங்கு என்பது கார்போ ஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு வகையாகும். 

அதிக சக்தியை அளிக்கக் கூடிய உணவாகவும் அதே நேரத்தில் சுலபமாக செரிமானம் ஆகக்கூடிய ஒரு உணவு வகையாக உருளை கிழங்கு கருதப்படுகிறது. 

எனவே தான் கடினமான உணவுகளை செரிமானம் செய்ய முடியாத நிலையில் இருக்கும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு உருளைக்கிழங்கு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

நீங்களும் பரோட்டாவை விரும்பி சாப்பிடக் கூடியவர் எனில் இனி வீட்டிலேயே செய்யலாம். தென் இந்திய உணவு வகைகளில் இன்று பரோட்டாவும் அடங்கி விட்டது. 
கோதுமை கேழ்வரகு ஆலு பரோட்டா செய்வது எப்படி?

அதுவும் தென் மாவட்டங்களில் கிடைக்கக் கூடிய கோதுமை பரோட்டா, ஆலு பரோட்டாவுக்கு தமிழகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். 

இரவு நேரங்களில் தள்ளு வண்டி கடைகள் தொடங்கி ரெஸ்டாரண்டுகள் வரை இந்த பரோட்டாவுக்கு மவுசு அதிகம். 

அப்படி நீங்களும் பரோட்டாவை விரும்பி சாப்பிடக் கூடியவர் எனில் இனி வீட்டிலேயே கோதுமை கேழ்வரகு ஆலு பரோட்டா செய்யலாம்.

தேவையான பொருள்கள் :

கோதுமை மாவு - அரை கப்

ராகி மாவு - அரை கப்

உப்பு - தேவையான அளவு

ஸ்டஃப்பிங்க்கு...

உருளைகிழங்கு - 1

கரம் மசாலாத் தூள் - அரை ஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

கொத்த மல்லித்தழை - சிறிதளவு

ஒமம் - கால் ஸ்பூன்
செய்முறை :
கோதுமை கேழ்வரகு ஆலு பரோட்டா செய்வது எப்படி?

கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். கோதுமை மாவு ராகி மாவு இரண்டையும் உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரை மணி நேரத்திற்கு மூடி ஊற விடவும்.

உருளை கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும். மசித்த உருளை கிழங்குடன் உப்பு, கரம் மசாலாத்தூள், கொத்த மல்லித்தழை, ஒமம் சேர்த்து கிளறவும்.

மாவை சமஅளவு உருண்டைக ளாக பிரித்து உருட்டி, பூரி அளவிற்கு திரட்டி உருளைக் கலவையை வைத்து நன்றாக மூடி கையால் தட்டி மெதுவாக திரட்டவும்.

வெற்றி பெற தேவையான ஆளுமைத் திறன் !

தோசைக் கல்லை அடுப்பில் வைத்து பரோட்டாவை சிறிதளவு எண்ணெய் விட்டு 2 பக்கமும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும். சுவையான கோதுமை கேழ்வரகு ஆலு பரோட்டா ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)