மிளகு, பூண்டுடன் சுவையான மீன் குழம்பு செய்வது எப்படி?

மிளகு, பூண்டுடன் சுவையான மீன் குழம்பு செய்வது எப்படி?

தினமும் மீன் சாப்பிடுவதனால் இரத்தக் குழாய் மற்றும் இதயத்தில் ஏற்படக் கூடிய பிரச்சனைகள் தவிர்க்கப்படுகிறது. 
மிளகு, பூண்டுடன் சுவையான மீன் குழம்பு செய்வது எப்படி?
முக்கியமாக ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருப்பதனால் உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. இந்த கொழுப்பு அமிலங்கள் மூளை மற்றும் கண்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியமாக அமைகிறது. 

மீன்களில் நிறைவுற்ற கொழுப்புகள் இல்லாததால், மீன் உங்கள் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. 
வைட்டமின் டி நம் உடலில் உள்ள அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களையும் உறிஞ்சுவதற்கு உதவுகிறது. மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. 

எனவே தினசரி உணவில் ஏதேனும் ஒரு வகை மீனை சேர்த்து கொள்ளுங்கள். சரி இனி மீன் கொண்டு மிளகு, பூண்டுடன் சுவையான மீன் குழம்பு செய்வது எப்படி?  என்பதை இங்கே பார்ப்போம். 
தேவையானவை  : 

மீன் (சங்கரா, வெள்ளைக் களங்கா, பாறை, வஞ்சிரம், வவ்வால், வரால்) - 1/4 கிலோ. 

அரைக்க: 

மிளகு - 1 தேக்கரண்டி. 

பூண்டு - 8 பல். 

மிளகாய்த் தூள் - 1.5 தேக்கரண்டி. 

தனியாத் தூள் - 2 தேக்கரண்டி. 

சின்ன வெங்காயம் - 10 

தக்காளி - 1 பெரியது. 

தாளிக்க: 

வெங்காயம் பொடியாக நறுக்கியது - 1. 

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி. 

கடுகு - 1/2 தேக்கரண்டி. 

சீரகம் 1/4 தேக்கரண்டி. 

கறிவேப்பிலை - சிறிதளவு. 

எண்ணெய் - தேவையான அளவு. 
மற்றவை: 

புளி -1 எலுமிச்சை அளவு 

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி. 

 உப்பு - தேவையானது 

செய்முறை  : 
மிளகு, பூண்டுடன் சுவையான மீன் குழம்பு செய்வது எப்படி?
புளியை தண்ணீர் விட்டு கரைசல் செய்து, அதனுடன் அரைத்த மசாலா, உப்பு, மஞ்சள் தூள் ஆகிய வற்றைக் கலந்து, சுவை பார்த்து வைத்துக் கொள்ள வேண்டும். 

கடாயில் எண்ணெய் சூடானதும் தாளிப்புப் பொருட்களை சேர்த்து, தாளித்து, கலந்த மசாலாவை ஊற்றி, தேவையான தண்ணீர் கலந்து, பச்சை மசாலா வாசம் நீங்கும் வரை கொதிக்க வைத்து, 
அதன் பின் மீன் துண்டு களை சேர்த்து, மூடி போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் சமைத்தால் எண்ணெய் மேலெழும்பி கவர்ச்சியும், சுவையும் மிக்க மீன் குழம்பு தயாராகி விடும். 

Note: 

வழக்கமாய் செய்யப்படும் மீன் குழம்பை விட சுவை யிலும், நறுமண த்திலும் வேறுபட்ட இந்தக் குழம்பு பெரும் பாலானவர் விரும்பி செய் வார்கள் என நம்புகிறேன். 

ஒரு முறை செய்து தான் பாருங்களேன்! காரம் கூட்டியோ அல்லது குறைத்தோ அவரவர் விருப்பப்படி செய்து கொள்ளவும்.
Tags: