நுங்கு பாயாசம் செய்வது | Palmyra Fruit Payasam Recipe !

நுங்கு பாயாசம் செய்வது | Palmyra Fruit Payasam Recipe !

0
கோடை காலத்தில் மட்டுமே அதிகளவில் கிடைக்கும் நுங்குவை வைத்து பல்வேறு ரெசிபி களை செய்யலாம். இன்று நுங்கு பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

நுங்கு – 10

பால் – 3 கப்

ஏலக்காய் – 3

சர்க்கரை – சுவைக்கு

செய்முறை :
நுங்கு பாயாசம் செய்வது

6 நுங்கின் தோலை நீக்கி மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். 4 நுங்கை பொடியாக நறுக்கி கொள்ளவும். 

சர்க்கரை யுடன் ஏலக்காயை சேர்த்து நன்கு மிச்ஸியில் பொடித்துக் கொள்ள வேண்டும்.

பாலை நன்றாக சுண்ட காய்ச்சி, ஆற வைத்துக் கொள்ளவும். நன்கு ஆறிய பாலில் அரைத்த, பொடியாக நறுக்கிய நுங்கு, ஏலக்காய் கலந்த சர்க்கரை, பால் என அனைத்தை யும் ஒன்றாக பாயசம் பதத்திற்கு கலக்கவும். 

இப்போது சுவையான நுங்கு பாயாசம் ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)