என்னென்ன தேவை?

நன்கு பழுத்த நேந்திரம் பழம் – 2 (விதை இல்லாமல் சுத்தம் செய்து நறுக்கவும்),

முழு தேங்காய் – 1,

பல் பல்லாக நறுக்கிய தேங்காய் – சிறிது,

துருவிய வெல்லம் – 1½ கப்,

நெய் – 1½ டேபிள் ஸ்பூன்,

பொடித்த பச்சரிசி – சிறிது,

முந்திரி, திராட்ைச – தேவைக்கு.

எப்படிச் செய்வது?
நேந்திரம் பழம் பாயாசம் செய்வது

தேங்காயை அரைத்து கெட்டியான முதல் பால், இரண்டாம் பால் எடுத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தை சூடாக்கி, நெய் விட்டு, நறுக்கிய தேங்காய், முந்திரி, திராட்ைசயை வறுத்து தனியே வைக்கவும். 
பின்பு அதே நெய்யில் அரிசியை வறுத்து எடுத்து தனியாக வைக்கவும். அதே பாத்திரத்தில் பழத்தையும் வறுத்து எடுத்து வைக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் அரிசி, இரண்டாம் பால் சேர்த்து நன்கு வேக விடவும். அது குழைந்து வரும்போது வெல்லத்தை போடவும். வெல்லம் கரைந்து வந்ததும், 
கெட்டியான முதல் பால், வறுத்த பழம் சேர்த்து கிளறி இறக்கி, வறுத்த தேங்காய்ப்பல், முந்திரி, திராட்சை சேர்த்து அலங்கரித்து படைத்து பரிமாறவும்.