ஜெலப்பினோ சீஸ் ஃபிங்கர் ரெசிபி | Jalapeno Cheese Fingers Recipe !





ஜெலப்பினோ சீஸ் ஃபிங்கர் ரெசிபி | Jalapeno Cheese Fingers Recipe !

0
நொய்டாவில் உள்ள டைம் மெஷின் உணவகத்தில் பிரத்யேக மாக தயாரிக்கப் படும் ருசியான சீஸி ஸ்நாக் தான் இந்த ஜெலப்பினோ சீஸ் ஃபிங்கர். 
ஜெலப்பினோ சீஸ் ஃபிங்கர் ரெசிபி

சோளம், மோர், உப்பு, சர்க்கரை, ஜெலப்பினோ மற்றும் செடர் சீஸ் ஆகிய வற்றை ஒன்றாய் கலந்து பேக் செய்யப்படும் இந்த ஸ்நாக்ஸ் இரவு நேரத்தில் நண்பர்க ளுடன் உங்களுக்கு பிடித்த படம் பார்த்துக் கொண்டே சாப்பிட அருமையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

1 கப் மஞ்சள் சோளம் 1 தேக்கரண்டி சர்க்கரை

1/2 தேக்கரண்டி பேக்கிங் சோடா

1/2 தேக்கரண்டி உப்பு

1 கப் மோர்

1 முட்டை

1/4 pound செடர், துருவிய

1/4 கப் ஸ்ப்ரிங் ஆனியன், பொடியாக நறுக்கப்பட்ட

1-2 மேஜைக்கரண்டி ஜெலப்பினோ, பொடியாக நறுக்கப்பட்ட

1/4 கப் அன்சால்ட்டட் பட்டர், உருகிய

எப்படி செய்வது 

மைக்ரோவேவ் அவனில் நடுப்பகுதியில் ரேக்கை வைத்து 218 டிகிரியில் ப்ரீஹீட் செய்து கொள்ள வேண்டும். அத்துடன் கார்ன் ஸ்டிக் பேனையும் 10 நிமிடம் வைத்து சூடுபடுத்த வேண்டும்.

சோளம், சர்க்கரை, பேக்கிங் சோடா மற்றும் உப்பு ஆகிய வற்றை ஒரு பெரிய பௌலில் போட்டு நன்கு கலக்க வேண்டும். இன்னொரு பௌலில் மோர் மற்றும் முட்டையை நன்கு கலக்கி வைத்து கொள்ளவும்.

அத்துடன் கலக்கி வைத்த சோலா மாவை சேர்க்கவும். மேலும் ஸ்ப்ரிங் ஆனியன், ஜெலப்பினோ, செடர், 2 மேஜைக் கரண்டி பட்டர் சேர்த்து நன்கு கலக்கவும்.
பிரசவ வலி வரப் போவதற்கான அறிகுறிகள் !
ஆண்கள் உடல் அமைப்பை கட்டு கோப்பாக வைத்திருக்க !
பழங்களை வேக வைத்து சாப்பிடுவது ஏன்?
இப்போது மைக்ரோவேவ் அவனில் இருந்து பேனை வெளியே எடுத்து இரண்டு மேஜைக் கரண்டி பட்டர் தடவி 12 முதல் 15 நிமிடம் வரை வைத்து பொன்னிற மானதும் எடுக்கவும்.

மோல்டுகள் இருந்து வெளியே எடுப்பதற்கு முன் 3 முதல் 5 நிமிடங்கள் வரை கார்ன் ஸ்டிக்கை வைத்து ஆறியபின் இறக்கவும். சூடான ஜெலப்பினோ சீஸ் ஃபின்கர் தயார்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)