காலிபிளவரால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

0
காலிபிளவரில் வைட்டமின் ஏ, பி, இ, கே சத்துக்கள் அதிகம் உள்ளன. தினமும் 90 கிராம் அளவுக்கு காலிபிளவர் சாப்பிடும் போது வைட்டமின் சி சத்து கிடைக்கிறது. 
காலிபிளவரால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
காலிபிளவர் மூளையை போன்ற தோற்றம் உடையது. இது மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. காலிபிளவரில் உள்ள ஊட்டச்சத்துகள் அனைத்தும் உடலுக்கு உன்னதமான மருந்தாகிறது. 
புற்று நோய் உருவாவதை தடுக்குகிறது. நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல் இல்லாது செய்கிறது. காலிபிளவர் கருவில் உள்ள குழந்தையின் மூளை, முதுகுத் தண்டு வளர்ச்சிக்கு உதவுகிறது. 

மூட்டு வலியை குறைப்பதில் காலிபிளவர் முக்கிய பங்கு வகிக்கிறது. மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்றவை இருப்பதால் இதில் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. 

புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்ட காலிபிளவர் இதயத்துக்கு பலம் கொடுக்கிறது. செரிமான கோளாறுகளை சரி செய்கிறது. 
இதை உணவில் சேர்த்துக் கொள்வதால் பல்வேறு நன்மைகள் விளையும். காலிபிளவரை பயன்படுத்தி கீழ்வாதம், முடக்குவாதத்தால் ஏற்படும் வலிக்கான மருந்து தயாரிக்கலாம்.

ஒரு ஸ்பூன் காலிபிளவர் பசை, சிறிது பூண்டு, மிளகு சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து குடித்தால் மூட்டுவலி, வாத ஜுரம், வீக்கம் சரியாகும். உடல் வலியும் குறையும். 

காலிபிளவர் இலைகளை பயன்படுத்தி அடிப்பட்ட வீக்கம், மூட்டு வலிக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.
விளக்கெண்ணெ ய்யுடன் காலிபிளவர் இலை பசையை சேர்த்து நன்றாக வதக்கி பத்தாக போட்டு துணிகட்டி வைத்தால் வலி, வீக்கம் சரியாகும். 

காலி பிளவரை பயன்படுத்தி சிறுநீரகம், இதயத்தை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.
ஒரு ஸ்பூன் காலிபிளவர் பூ பசை, அரை ஸ்பூன் சீரகம், சிறிது மிளகுப் பொடி சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடிக்கவும். 

இது, இதயத்துக்கு பலம் கொடுக்கும் ஊட்டசத்தாகிறது. எலும்பு பலவீனம் அடையாமல் செய்கிறது. அடிபட்ட இடத்தில் ரத்தம் சேர்ந்து வீக்கம், ரத்தகசிவு இருந்தால் அவைகள் சரியாகும். 
காலிபிளவரால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
சிறுநீர் பெருக்கியாக விளங்குவதுடன் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது. உன்னதமான இதய ஊட்டச் சத்தாக விளங்குகிறது.

காலிபிளவரை பயன்படுத்தி புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை கட்டுப் படுத்தும் மருந்து தயாரிக்கலாம். 
ஒரு ஸ்பூன் காலிபிளவர் பசை, கால் ஸ்பூன் மஞ்சள் பொடி, அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். 

வடிகட்டி 50 முதல் 100 மில்லி அளவுக்கு தினமும் புற்று நோயாளிகள் எடுத்துக் கொள்ளும் போது, புற்றுநோய் செல்கள் வளர்வது தடுக்கப்படும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(300)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !