புனே ஸ்பெஷல் தந்தூரி டீ செய்வது எப்படி?





புனே ஸ்பெஷல் தந்தூரி டீ செய்வது எப்படி?

0
தந்தூரி என்றதுமே சிக்கனும், ரொட்டியும் தான் நமக்கு நினைவுக்கு வரும். ஆனால் தந்தூரி டீயை கேள்விப் பட்டிருக்கிறீர்களா?  புனேவில் தற்போது இந்த தந்தூரி டீ தான் டிரெண்டிங். 
தந்தூரி டீ
புனேவிற்கு அருகில் உள்ள கராடி என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரமோத் மற்றும் அமல் ராஜ்டியோ. பெரும் பாலானோர் களைப் போல் இவர்களும் இஞ்ஜினியரிங் படித்து விட்டு வேலை யில்லாமல் இருந்தார்கள். 

அப்போது தான் டீ கடை தொடங்கும் ஐடியா இவர்களுக்கு உருவானது. 

வெறும் டீ கடை என நடத்தினால், பத்தோடு பதினொன்றாக இருக்கும் என்பதால் மண்டைக் குடைந்து யோசித்து, இறுதியாக தந்தூரி டீ போடலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கி றார்கள்.
தந்தூரி அடுப்பில் வைக்கப்பட்ட மண் குடுவையில், தேநீரை ஊற்றி இயற்கையான முறையில் இந்த ஆவி பறக்கும் தந்தூரி டீ உருவாகிறது. இதற்காக பாலையும் அந்த காலத்தில் செய்தது போல் மண் சட்டியிலேயே காய்ச்சுகிறார்கள். 
இவர்களின் இந்த வித்தியாசமான அணுகுமுறை வாடிக்கை யாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் பலரும் ஆர்வமுடன் இந்த தேநீரை பருகுகிறார்கள். இதனால் மண் குடுவை விற்பனையும் அங்கு அதிகரித் துள்ளது. 

தேவையானவை . :  

பால் – இரண்டு கப்

டீத்தூள் – இரண்டு ஸ்பூன்

சர்க்கரை – நான்கு ஸ்பூன்

இஞ்சி – ஒரு சிறிய துண்டு

ஏலக்காய் பொடி – 1/2 ஸ்பூன்

சிறிய மண் கலயம் – ஒன்று

செய்முறை . : 

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அவற்றில் இரண்டு கப் பால் மற்றும் 1/2 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். அதன்பிறகு இரண்டு ஸ்பூன் டீத்தூள் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

பின்பு நான்கு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி விடவும். இறுதியாக ஏலக்காய் பொடி மற்றும் இடித்து வைத்துள்ள இஞ்சி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு முறை கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். 

அவ்வளவு தான் அடுப்பை இப்போது மிதமான சூட்டில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது நாம் மண் கலயத்தை அடுப்பில் வைத்து நன்றாக சூடுபடுத்த வேண்டும். 
அதாவது மண் பானையை 20 நிமிடங்கள் வரை நல்ல அடுப்பை வேகமாக எரியவைத்து பானையை சூடு படுத்தி வைத்து கொள்ளவும்.

பின்பு தந்தூரி டீயை வடிகட்டி அப்படியே இந்த சூடுபடுத்திய பானையில் ஊற்ற வேண்டும். டீயானது பானையில் ஊற்றும் போது நன்றாக நுரைத்து வரும்.

அவ்வளவு தான் தந்தூரி டீ தயார். சிறிது நேரம் கழித்த பிறகு இந்த டீயை வேறொரு பாத்திரத்தை மாற்றி கொள்ளுங்கள். இந்த சுவையான தந்தூரி டீ அருந்துங்கள்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)