காரம் என்றால் பச்சை மிளகாய் ! #greenchilly

காரம் என்றால் பச்சை மிளகாய் ! #greenchilly

0
காரம் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது மிளகாய் தான். அப்படிப் பட்ட மிளகாயை பலர் விரும்புவ தில்லை, முக்கியமாக குழந்தைகள். 
பச்சை மிளகாய்
ஆனால் காரசாரமாக உண்ணும் இன்னும் சிலரோ மிளகாயை விரும்பி உணவில் சேர்த்துக் கொள்வார்கள். அதையும் மீறி அதனை பற்றி பலருக்கு எதுவும் தெரிவதில்லை. 

அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உணவுப் பொருட்கள் தான், நம்முடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. 

அந்த வரிசையில் பச்சை மிளகாயும் ஒன்று. நாம் அன்றாடம் சமையலில் சேர்த்துக் கொள்ளப்படும் பச்சை மிளகாய், பல்வேறு ஆரோக்கிய பலன்களை உடலுக்கு அள்ளிக் கொடுக்கிறது. 

பச்சை மிளகாயில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்டுகள் போன்ற பல வகையான ஊட்டச் சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. 

உணவில் பச்சை மிளகாயை சேர்க்கும் போது, நமக்கு மேற்கண்ட சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும். 

சமைக்கும் நேரத்தில் பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்வதால், இது உணவிற்கு ஒருவித தனிசுவையை கொடுப்பது மட்டுமல்லாமல், பல ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கிறது.

இதயக்குருதி குழாய் நோய்களின் இடர்பாடு குறையும் கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைக்ளிசரைடு அளவுகளை குறைப்பதோடு மட்டு மல்லாமல், ஆபத்தான இரத்த உறைதலை உண்டாக்கும் இரத்தக் கட்டிகளை குறைக்கும்.
இதயக்குருதி குழாய் நோய்கள் வருபவர்களும் சரி, ஏற்கனவே வந்தவர்க ளுக்கும் சரி, மேற்கூறிய உடல்நல பயன்கள் மிகவும் முக்கிய மானவையாக கருதப்படுகிறது.
அழற்சி குறையும்; மிளகாய் உண்ணுவதால் ஏற்படும் மற்றொரு மிக முக்கி யமான உடல்நல பயன், அழற்சி குறையும். முக்கியமாக கீல்வாதம் உள்ளவ ர்களுக்கு இது பெரிய நிவாரணியாக விளங்கும்.

மேலும் மிளகாய் என்பது உடலில் ஏற்பட்டுள்ள வலியை குறைக்கவும் உதவு கிறது. மிளகாயில் அதிக அளவு காப்சைசின் உள்ள காரணத்தினால் தான் மேற்கூறிய உடல்நல பயனை பெற முடிகிறது.

மேலும் இன்று அதிக அளவில் காப்சைசின் நிறைந்துள்ள க்ரீம்கள் சந்தையில் கிடைக்கிறது. கீல்வாதம், முதுகு வலி மற்றும் இதர வலிகளுக்கும் அவை பயன்படுகிறது.
பச்சை மிளகாயை அடிக்கடி சாப்பிடுவதால், அல்சர் வராமல் தடுக்கப் படுகிறது. வயிற்றுப்புண் இருப்பவர்கள் பச்சை மிளகாய் சாப்பிடுவதை தவிர்ப்பது மிக நல்லது. 

பச்சை மிளகாயை தொடர்ந்து சாப்பிடுவது, நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நன்மை அளிக்கும். இவை உடலில் இரத்த சர்க்கரையின் அளவு அதிகரிப்பதைத் தடுத்து, சமன்படுத்தவும் உதவுகிறது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)