சுவையான இறால் சீஸ் ரோல் செய்வது எப்படி?





சுவையான இறால் சீஸ் ரோல் செய்வது எப்படி?

0
சீஸில் கால்சியம், புரதம் உள்ளது. இதில் சாச்சுரேடட் ஃபேட்ஸ் மற்றும் சோடியமும் உள்ளது. இதனால் இதை எடுத்துக் கொள்ள விரும்புபவர்கள் மிதமான அளவில் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
சுவையான இறால் சீஸ் ரோல் செய்வது எப்படி?
சீஸில் கால்சியம், புரதம், மெக்னீசியம், சிங்க், வைட்டமின் ஏ, டி மற்றும் கே ஆகிய சத்துக்கள் உள்ளன. இது குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு எலும்பு ஆரோக்கியம் வலுப்பெற உதவுகிறது.

பற்களின் ஆரோக்கியம் மற்றும் வலுப்பெறுவதில் கால்சியம் முக்கிய பங்கு வகிக்கிறது. சீஸ் கால்சியம் சத்து நிறைந்தது. சீஸில் கால்சியச்சத்து அதிகம் உள்ளது. இது பல் ஆரோக்கியம் அதிகரிக்க உதவுகிறது. 
இது பற்களில் கேவிட்டி பிரச்னைகளை எதிர்த்து போராட உதவுகிறது. சீஸ் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. கொழுப்பு மற்றும் சோடியம் சத்து குறைவாக உள்ள சீஸ் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப் படுகிறது. 

ஸ்விஸ் சீஸில் இவை குறைவாக உள்ளது. காட்டேஜ் சீஸ், பார்மேஷன் சீஸ், ஃபீட்டா சீஸ், கோட்ஸ் சீஸ் ஆகியவற்றிலும் கொழுப்பு மற்றும் சோடியம் குறைவாக உள்ளது.

பால் பொருட்களில் அதிகளவில் ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. அது மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. வயோதிகம் தொடர்பான நரம்பியல் கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கிறது. 

தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 2 கப்,

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,

வெது வெதுப்பான தண்ணீர்,

உப்பு - தேவைக்கு.

இறால் - 200 கிராம்,

சீஸ் - 100 கிராம்,

வெங்காயம் - 2,

பெங்களூர் தக்காளி - 1,

குடைமிளகாய் - 1/4 கப்,

கரம் மசாலா தூள், மிளகாய் தூள், சிக்கன் மசாலா தூள் - தலா 1/2 டீஸ்பூன்,

கொத்த மல்லித்தழை - 1 கைப்பிடி,

உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை
இறால் சீஸ் ரோல் செய்வது
கொத்தமல்லி, குடை மிளகாய், தக்காளி, வெங்காய த்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். இறாலை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். 

கோதுமை மாவில், உப்பு, எண்ணெய், வெது வெதுப்பான தண்ணீர் சேர்த்து கலந்து நன்றாக பிசைந்து 2 மணி நேரம் ஊறவிட்டு, சப்பாத்தி களாக சுட்டு ஹாட்பாக்சில் போட்டு வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத் போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அடுத்து தக்காளி, குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
இறால், உப்பு, மசாலா தூள்கள் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து நன்கு வதக்கவும். தண்ணீர் எல்லாம் வற்றி திக்கான பதம் வந்தவுடன் அதில் கெர்த்தமல்லித்தழை தூவி கிளறி இறக்கவும்.

சப்பாத்தியில் வெண்ணெய் தடவி இறால் கலவையை நடுவில் வைத்து அதன் மீது சீஸ் தூவி ரோல் செய்து மைக்ரோ ஓவனில் 2 நிமிடம் வைத்து இரண்டாக வெட்டி பரிமாறவும். சூப்பரான இறால் சீஸ் ரோல் ரெடி.

இதை படித்து உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)