கடலை பருப்பு இனிப்புப் பணியாரம் செய்வது | Serving of Bengal gram dal Sweet !

கடலை பருப்பு இனிப்புப் பணியாரம் செய்வது | Serving of Bengal gram dal Sweet !

0
வீட்டில் எப்போதும் இட்லி சுட்டு போர் அடித்திருந்தால், அப்போது மைதா மாவைக் கொண்டு சு+ப்பரான முறையில் பணியாரம் செய்து சாப்பிடலாம். அதிலும் இதனை மாலை உணவாக செய்து சாப்பிடுவது மிகவும் எளிது. 
கடலை பருப்பு இனிப்புப் பணியாரம் செய்வது

குறிப்பாக பணியாரம் குழந்தை களுக்கு மிகவும் பிடித்த ஒரு உணவும் கூட. இப்போது இந்த ஆரோக்கிய மான கடலைப் பருப்பு இனிப்புப் பணியாரத்தை வீட்டில் இருந்த படியே எப்படிச் செய்வது என்று பார்ப்போம். 

தேவையானப் பொருட்கள் : 

கடலைப் பருப்பு - 2 கப் 

மைதா மாவு - 2 கப் 

தேங்காய் துருவல் - 1கப் 

வெல்லம் - 2 கப் (பொடித்தது) 

ஏலக்காய் - 6 

நெய் - தேவையான அளவு 

தண்ணீர் - தேவையான அளவு 

செய்முறை :  

முதலில் கடலைப் பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின்னா; அதனை நன்றாகக் கழுவி வேக வைத்து தண்ணீரை வடித்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சு+டானதும், தேங்காய் துருவலுடன் தேவையான அளவு நெய் சேர்த்து பொன்னிற மாக வறுத்துக் கொள்ளவும். 

பிறகு வேக வைத்த கடலைப் பருப்பு, வறுத்த தேங்காய் துருவல், ஏலக்காய், பொடித்த வெல்லம் சேர்த்து தண்ணீர் விடாமல் மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்தக் கலவையை சிறிய எலுமிச்சைப்பழ அளவுக்கு உருண்டைக ளாக உருட்டிக் கொள்ளவும். 

பின்னர் மைதா மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைத்துக் கொள்ள வேண்டும். தயாராக வைத்துள்ள உருண்டை களை மைதா மாவுக் கலவையில் முக்கி எடுத்து, பணியாரக்  கல்லை அடுப்பில் வைத்து குழிகளில் நெய் விட்டுக் கொள்ளவும்.

உருண்டை களை கல்லில் போட்டு இருபுறமும் வேக வைத்து எடுத்தால், கடலைப் பருப்பு பணியாரம் தயார்!!
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)