சுவையான ராகி ரவா கொழுக்கட்டை செய்வது எப்படி?





சுவையான ராகி ரவா கொழுக்கட்டை செய்வது எப்படி?

0

கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால், ஊட்டச்சத்து குறைபாடுகள், சிதைவு நோய்கள் போன்ற பல நோய்கள் உடலை அணுகாதவாறு பார்த்துக்  கொள்ளலாம். 

சுவையான ராகி ரவா கொழுக்கட்டை செய்வது எப்படி?

உடலைக் குளிர்ச்சியாக்கும். உடலுக்கு வலுவையும் தரும். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு அரு மருந்து. 

சுவையான மெக்ஸிகன் ரைஸ் செய்வது எப்படி?

அரிசி சாதத்துக்குப் பதிலாக இந்தக் கூழைக் குடித்து வந்தால், விரைவாக எடை குறையும். கேழ்வரகில் உள்ள தாவர வகை இரசாயன கலவைகள் செரிமானத்தை குறைக்கின்றன. 

இது நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் கேழ்வரகை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. 

சரி இனி ராகி ரவா கொண்டு சுவையான ராகி ரவா கொழுக்கட்டை செய்வது எப்படி? என்று பார்ப்போம். 
தேவையானவை :.

ஆச்சி கேழ்வரகு மாவு – ஒரு கப்,

ஆச்சி ரவா இட்லி மிக்ஸ் – ஒன்றரை கப்,

தயிர் – ஒரு கப்,

கேரட் துருவல் - ஒரு கப்,

தேங்காய் துருவல் – தலா ஒரு டேபிள் ஸ்பூன்,

நறுக்கிய கொத்த மல்லி – ஒரு டேபிள் ஸ்பூன்,

சோம்புத்தூள் – அரை டீஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
சுவையான ராகி ரவா கொழுக்கட்டை செய்வது எப்படி?
ஆச்சி ரவா இட்லி மிக்ஸுடன் தயிர் சேர்த்து அரை மணி நேரம் ஊற விடவும். அதற்குள் ஆச்சி கேழ்வரகு மாவை வெறும் வாணலியில் நன்கு வறுத்து… 

அத்துடன் உப்பு சேர்த்து, கேரட் துருவல், தேங்காய் துருவல், கொத்தமல்லி, சோம்புத்தூள் சேர்க்கவும்.
அந்தக் கலவையை ஆச்சி ரவா இட்லி மிக்ஸுடன் சேர்த்து, கெட்டியாகக் கலந்து கொழுக்கட்டை களாகப் பிடித்து, ஆவியில் வேக வைத்து (பத்து நிமிடத்தில் வெந்து விடும்) இறக்கவும்.

சுடச்சுட பரிமாறவும். மாவை பால்ஸ் களாகவும் உருட்டி வேக வைக்கலாம். இதற்கு தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி சிறந்த காம்பினேஷன்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)