குடமிளகாய் ரைஸ் செய்வது | Make the Capsicum Rice Recipe !





குடமிளகாய் ரைஸ் செய்வது | Make the Capsicum Rice Recipe !

0
தேவையானவை : 

பொடியாக நறுக்கிய குடமிளகாய் – ஒரு கப், 

சாதம் – ஒரு கப், 

கடுகு – அரை டீஸ்பூன், 

உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன், 

கடலைப் பருப்பு – ஒரு டீஸ்பூன், 

பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, கொத்த மல்லி – சிறிதளவு, 

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை, 

பச்சை மிளகாய் – ஒன்று, 

எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், 

உப்பு – தேவையான அளவு. 

செய்முறை : 
குடமிளகாய் ரைஸ் செய்வது
கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு தாளித்து… கீறிய பச்சை மிளகாய், குடமிளகாயை சேர்த்து வதக்கவும். 

பிறகு, சாதம், மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, கொத்த மல்லி, உப்பு சேர்த்துக் கலக்கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)