சுண்டைக்காய் நெல்லிக்காய் வதக்கல் செய்முறை | Sundaikkay Gooseberry Recipe !

சுண்டைக்காய் நெல்லிக்காய் வதக்கல் செய்முறை | Sundaikkay Gooseberry Recipe !

0
தேவையானவை:

பெரிய நெல்லிக் காய் – 8,

பிஞ்சு சுண்டைக்காய் – அரை கப்,

மஞ்சள் தூள் – சிறிதளவு,

பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை,

எண்ணெய் – 3 டீஸ்பூன்,

வெல்லம் – பெரிய நெல்லிக்காய் அளவு,

உப்பு – தேவைக்கேற்ப,

நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன். வறுத்துப் பொடிக்க:

காய்ந்த மிள காய் – 3, கடுகு, 

வெந்தயம், எண்ணெய் – தலா அரை டீஸ்பூன்.

செய்முறை:
சுண்டைக்காய் நெல்லிக்காய் வதக்கல்
அரை டீஸ்பூன் எண் ணெய் விட்டு வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்துப் பொடிக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு நெல்லிக் காய்களை வதக்கவும் (8 நிமிடத்தில் வதங்கி விடும்). 

சூடு ஆறியதும் விதைகளை நீக்கி, ஒவ் வொரு நெல்லிக் காயையும் எட்டாக நறுக்கிக் வைத்துக் கொள்ளவும். சுண்டைக் காய்களை இரண்டாக நறுக்கி, ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். 

இத னுடன் உப்பு, மஞ்சள் தூள், பொடித்த வெல்லம் சேர்க்கவும். பிறகு, வறுத்துப் பொடித்து வைத்ததை சேர்த்து, நெல்லிக்காய், பெருங் காயத்தூள், சேர்த்து, நல்லெண் ணையை விட்டு கிளறி, எல்லாமாகச் சேர்ந்து வந்ததும் இறக்கி விடவும். 

குறிப்பு: 

இது, ஞாபகசக்தி பெருக மிகவும் பயன்படும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)