ராகி உருளைக்கிழங்கு கபாப் செய்வது எப்படி?

0
பிறந்த குழந்தை முதல் 90 வயது பெரியவர் வரைக்கும் அனைவரும் சாப்பிடக்கூடிய உணவுப்பொருள் ராகி
ராகி உருளைக்கிழங்கு கபாப் செய்வது எப்படி?
இது உடலின் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்யும். ராகியில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளதால், உடலுக்கு வலிமை தரும். 

ரத்தச்சோகை வராமல் தடுக்கும். எனவே, இது ரத்தசோகை, உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த மருந்து. 

ராகி உடல் சூட்டைக் குறைத்து, உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய ஒன்று. ராகி மற்றும் உருளைக்கிழங்கைக் கொண்டு ஹெல்தி கபாப் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

மசித்த உருளைக்கிழங்கு & அரை கப்

ராகி மாவு & அரை கப்

இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது & 1 டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா & கால் டீஸ்பூன்

கடலை மாவு & 1 டீஸ்பூன்

எண்ணெய் & 2 டீஸ்பூன்

புதினா & சிறிதளவு

உப்பு & தேவையான அளவு

செய்முறை:
ராகி உருளைக்கிழங்கு கபாப் செய்வது எப்படி?
முதலில் ஒரு வாணலியில் ராகி மாவை மிதமான சூட்டில் பச்சை வாசனை போகும் வரை வறுக்கவும். 

ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, மசித்த உருளைக் கிழங்கு, கடலை மாவு, உப்பு, கரம் மசாலா, பொடியாக நறுக்கிய புதினா, 

எண்ணெய், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும், இந்த கலவையை நீண்ட உருண்டைகளாக உருட்டி எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

இறுதியாக, ஒவ்வொரு கபாபிலும் குச்சியைக் குத்தி பரிமாறவும். அவ்ளோதாங்க.. சுவையான ராகி உருளை கபாப் ரெடி..!
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)