சுவையான மிண்ட் சிக்கன் பார்பிகியூ செய்வது எப்படி?

சுவையான மிண்ட் சிக்கன் பார்பிகியூ செய்வது எப்படி?

உணவுக்கும் ஆரோக்கியத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நாம் உணவுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை சமையல் செய்யும் முறைக்குக் கொடுக்கத் தவறி விடுகிறோம். 
சுவையான மிண்ட் சிக்கன் பார்பிகியூ செய்வது எப்படி?
ஓர் உணவை ஊட்டச்சத்துகளை இழந்து விடாமல் சமைக்க வேண்டும். அதுதான் சிறந்த சமையல் முறைக்கான அடையாளம். இன்றைக்கு ஆரோக்கிய சமையல் முறை பலரின் கவனத்திலிருந்தும் கலைந்து போன ஒன்றாக இருக்கிறது.

பார்பிக்யூ என்பது கரி மற்றும் மரத்துண்டுகளைக் கொண்டு மாமிசங்களை நேரடியாக நெருப்பு, வெப்ப அனல் மற்றும் புகைச்சலைக் கொண்டு சமைக்கப்படும் சமையல் முறையாகும். 

உணவைப் புகையில் வேக வைப்பது தான் இதன் அடிப்படை. எப்போதாவது இந்த முறையில் உணவைச் சமைத்துச் சாப்பிடலாம். அசைவ உணவுகளைச் சமைப்பதற்குப் பெரும்பாலும் இந்த முறைக்கே முதலிடம்.

மிகக்குறைந்த வெப்பநிலையை கொண்டு வெப்ப புகையினால் இறைச்சியானது சமைக்கப் படுகிறது. பேக்கிங் முறையில் சராசரி வெப்ப நிலையில் மூடப்பட்ட சூழ்நிலையில் இறைச்சியானது சமைக்கப்படும். 

பார்பிக்யூ முறையைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், உணவுப் பொருளிலுள்ள ஊட்டச்சத்து குறையும். 

உணவுப் பொருளை நீண்ட நேரம் புகையிலும் நெருப்பிலும் மாற்றி மாற்றி  காட்டும் போது, புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் உணவுடன் சேர்வதற்கான வாய்ப்பு அதிகம். 

பிரேசிங் முறையில் இறைச்சியானது சராசரி வெப்ப நிலையில் உலர்ந்த சூழ்நிலையில் சமைக்கப்படும். க்ரில்லிங் முறையில் அதிக வெப்ப நிலையில் நேரடியான முறையில் சமைக்கப்படும்.

தேவையான பொருட்கள் :.

போன்லெஸ் சிக்கன் - 600 கிராம்

புதினா - ஒரு கைபிடி

பச்சை மிள்காய் - 2

இஞ்சி துருவல் - 1 டீஸ்பூன்

பூண்டு - 4 பல்

கரம் மசாலா - அரைஸ்பூன்

தயிர் - 100 மில்லி

உப்பு - தேவைக்கு

ஆலிவ் ஆயில் - 1டேபிள் ஸ்பூன்

செய்முறை: 

சுவையான மிண்ட் சிக்கன் பார்பிகியூ செய்வது எப்படி?
புதினா, மிளகாய், உப்பு, இஞ்சி பூண்டு, கரம் மசாலா சேர்த்து அரைத்து கொள்ளவும். அரைத்த வற்றுடன் தயிர் சேர்க்கவும்.

ரெடி செய்த கலவையை, சுத்தம் செய்து கட் செய்து கழுவி, நீர் வடிகட்டிய சிக்கனில் சேர்க்கவும். குறைந்தது 4 மணி நேரம் ஊற வைக்கவும்.

டிக்கா ஸ்டிக்கில் அடுக்கி வைக்கவும். பார்பிகியு அடுப்பில் கங்கு ரெடியா னவுடன் ரெடி செய்த சிக்கன் ஸ்டிக்கை செய்ததை வைக்கவும்.

திருப்பி திருப்பி வைத்து வெந்து மணம் வரவும் சுட்டு எடுக்கவும். சூப்பர் சுவை யான மிண்ட் சிக்கன் பார்பிகியு ரெடி.
Tags: