ருசியான சிக்கன் பார்லி சூப் செய்வது எப்படி?





ருசியான சிக்கன் பார்லி சூப் செய்வது எப்படி?

0
பார்லி தண்ணீர் குடிப்பதால் சிறுநீரகங்களுக்கு ஏதேனும் நன்மை ஏற்படுமா, சிறுநீரக பாதிப்புக்கு காரணமான கிரியாட்டினின் அளவு குறையுமா என்ற சந்தேகங்கள் பலருக்கும் இருக்கின்றன. 
ருசியான சிக்கன் பார்லி சூப் செய்வது எப்படி?
தற்போதைய மருத்துவ அறிவியலின்படி பார்லி தண்ணீர் குடிப்பதால் கிரியாட்டினின் அளவு குறையும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. 

பார்லி தண்ணீர் குடிப்பதால் சிறுநீரகங்களின் இயக்கம் சீராகும் என்பதும் மிகவும் தவறு. செரிமான கோளாறுகளை இந்த காய் சரிசெய்கிறது. 

ப்ரோக்கோலியில் உள்ள நார்ச்சத்து, வயிறு, குடல்களின் செரிமானத்திற்கு உதவுவதுடன், உணவுகள் எளிதாக ஜீரணமாக உதவுகிறது. இதனால், மலச்சிக்கல் ஏற்படாமலும் தடுக்கிறது. 

ப்ரோக்கோலி அதிகம் சாப்பிடுபவர் களுக்கு தீங்கு விளைவிக்கும் கொலஸ்ட்ரால் உடலில் இருந்து மெல்ல மெல்ல நீங்குகிறதாம். 

சிக்கன் துண்டுகளை எண்ணெய் சேர்க்காமல் அவித்து சாப்பிடுவது, தேவையற்ற LDL கொழுப்பை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். 
எண்ணெயில் பொரித்து, வறுத்து சாப்பிடுவது இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இயல்பாக சிக்கன் பெண் குழந்தைகளுக்கு அவ்வளவு நல்லது அல்ல என வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுவதுண்டு. 
இது ஒரு பக்கம் இருந்தாலும், பெண்கள் ஆரோக்கியமான கருவுறதல் செயல்பாடு மற்றும் ஆண்களின் சிறந்த மற்றும் தரமான விந்து உற்பத்திக்கு உதவும் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றனர். 

அந்த வகையில், குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் பெண்கள் மற்றும் ஆண்கள் தினசரி போதுமான அளவு சிக்கன் எடுத்துக் கொள்வது நல்லது.

தேவையான பொருட்கள் :

பார்லி - 1/2 கப்

எலும்பில்லாத சிக்கன் - 100 கிராம்

கேரட் - 1

ப்ரோக்கோலி - சிறிதளவு

பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 4 பல்லு

இஞ்சி - 1/2 இன்சி

பச்சை மிளகாய் - 1

மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி

கொத்த மல்லி - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :
சிக்கன் பார்லி சூப் செய்வது
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். ப்ரோக்கோலியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். கேரட்டை வட்டமான துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். 

கொத்த மல்லி, இஞ்சி, ப.மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். பார்லியை நன்றாக சுத்தம் செய்து போதுமான அளவில் தண்ணீர் ஊற்றி நன்றாக அவித்து கொள்ளவும். 

காடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும வெங்காயம், பூண்டு, இஞ்சி, ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில், சிக்கனை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். அடுத்து அதில் கேரட், ப்ரோக்கோலியை சேர்த்து வதக்கவும்.

காய்கள், சிக்கல் வெந்ததும் அதில், வேக வைத்த பார்லியை தண்ணீருடன் ஊற்றி உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கொதிக்க விடவும். சூப் நன்கு கொதித்த வுடன் அடுப்பை அனைத்து கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)