க்ரீன் கறி சிக்கன் செய்வது | Green Curry Chicken Makes !





க்ரீன் கறி சிக்கன் செய்வது | Green Curry Chicken Makes !

0
தேவையானவை :

கோழியின் மார்புப் பகுதி - 500 கிராம்

தேங்காய்ப் பால் - 3 கப்

க்ரீன் கறி பேஸ்ட் (குழம்பிற்குரிய மஸாலா) - அரை தேக்கரண்டி

நார்த்தங்காய் இலை - 3

ஃபிஷ் ஸாஸ் (Fish Sauce) - 2 மேஜைக் கரண்டி

கறி சுண்டைக்காய் (கசக்காதது) - 1 கப்

துளசி இலை - 3 மேஜைக் கரண்டி

கோக்கனட் க்ரீம் - 2 கப்

சிகப்பு மிளகாய் - 2

உப்பு - தேவையான அளவு

இதயம் நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :
க்ரீன் கறி சிக்கன் செய்வது
கோழிக் கறியின் மார்புப் பகுதியை மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ` கப் தேங்காய்ப் பாலுடன் கோழிக்கறித் துண்டுகளைப் போட்டு வேக வைத்துக் கொள்ளவும். நார்த்தங்காய் இலையை சிறு துண்டுக  ளாக கிள்ளி வைக்கவும்.

சிகப்பு மிளகாயை நீளவாக்கில் கிள்ளிக் கொள்ளவும். வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மிளகாய் மற்றும் க்ரீன் கறி பேஸ்ட்'டைப் போட்டு வதக்கவும். அதன்பின் கோகனட் க்ரீமை மெதுவாக சேர்க்கவும். மீதமுள்ள தேங்காய்ப் பாலை ஊற்றி, மிதமான தீயில் சூடேற்றவும்.

லேஸாக கொதித்ததும் கோழிக்கறி வேக வைத்ததைப் போட்டு சுண்டக்காய் களையும் போட்டு ஃபிஷ் ஸாஸ் சேர்க்கவும். சுண்டக்காய் வெந்து குழம்பு கெட்டியானதும் 2 மேஜைக் கரண்டி துளசி இலை, மிளகாய் கிள்ளியது போட்டு இறக்கி வைக்கவும். 

பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றி துளசி இலை தூவி பரிமாறவும். ஃபிஷ் ஸாஸ் சேர்த்து தயாரிக்க ப்படும் உணவு வகைகளில் உப்பு சரி பார்த்து, தேவைப் பட்டால் மட்டும் உப்பு சேர்க்க வேண்டும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)