உருளைக்கிழங்கு சாப்ஸ் செய்முறை / Potato Chops Recipe !

0
தேவையானவை :
உருளைக் கிழங்கு 500 கிராம்

சிகப்பு மிளகாய் 6

பட்டை 1 துண்டு

கிராம்பு 1

சோம்பு அரை தேக்கரண்டி

சின்ன வெங்காயம் 6

மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி

கொத்த மல்லி இலை 1 தேக்கரண்டி

உப்பு தேவையான அளவு

செய்முறை :
உருளைக்கிழங்கு சாப்ஸ்
இதயம் நல்லெண்ணெய் 4 மேஜைக் கரண்டி உருளைக் கிழங்கை குழையாமல் முக்கால் பதமாக வேக வைத்துக் கொள்ளவும். 

ஆறிய பிறகு தோலை நீக்கி விட்டு, சற்று பெரிய துண்டு களாக நறுக்கிக் கொள்ளவும். மிளகாய், சோம்பு, வெங்காயம் இவற்றை அரைத்துக் கொள்ளவும்.

உருளைக் கிழங்கு துண்டு களுடன் அரைத்த மஸாலா, உப்பு, மஞ்சள் தூள் போட்டுக் கலந்து கொள்ளவும். வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, 

காய்ந்ததும் பட்டை, கிராம்பு போட்டு தாளித்து, கிழங்குத் துண்டு களைப் போட்டு மிதமான தீயில் வைத்து சிவக்க வதக்கி, கொத்த மல்லி இலை போட்டு இறக்கி பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)