டேஸ்டியான வாழைப்பழ பிஸ்கட் செய்வது எப்படி?





டேஸ்டியான வாழைப்பழ பிஸ்கட் செய்வது எப்படி?

0
வாழைப்பழம் உடலில் உள்ள ஹோர்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது.
டேஸ்டியான வாழைப்பழ பிஸ்கட் செய்வது எப்படி?
நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. 
பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும்  இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது. நம்முடைய உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப் படுத்துகிறது. 

உடம்பில் உள்ள செல்களை தூய்மையாகவும் நல்ல ஊட்டச் சத்துடனும் வைத்து கொள்கிறது. வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது. 

சரி, இனி வாழைப்பழ பிஸ்கட் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையானவை
மைதா மாவு -- 200 கிராம்

சர்க்கரை பொடி -- 100 கிராம்

வெண்ணைய் -- 100 கிராம்

கார்ன் ப்ளேக்ஸ் -- 50 கிராம்

முந்திரி பருப்பு -- 25 கிராம்

பேக்கிங் பவுடர் -- 1/2 ஸ்பூன்

உப்பு -- 1 சிட்டிகை

பூவன் வாழைப்பழம் -- 1 என்னம்

முட்டை -- 1 என்னம்

வாழைப்பழ எசன்ஸ் -- சில துளிகள்
செய்முறை :
டேஸ்டியான வாழைப்பழ பிஸ்கட் செய்வது எப்படி?
முதலில் முந்திரியை பொடி யாக்கவும். முட்டையை நன்கு அடித்துக் கொள்ளவும். மைதா மாவு, பேக்கிங் பவுடரை கலந்து சலிக்கவும். அதனுடன் உப்பு சேர்க்கவும். 

வெண்ணை யுடன் சர்க்கரையை பொடியை கலந்து நன்கு அடித்து முட்டை, எசன்ஸ் சேர்த்து கலக்கி 
இக்கலவையில் கார்ன் ப்ளேக்ஸ், முந்திரி பவுடர் சேர்த்து மைதா மாவு, வாழைப்பழம் சேர்த்து நன்கு பிசையவும். கலவை ஸ்பூனில் எடுக்கும் பதத்தில் இருக்க வேண்டும். 

நெய் தடவிய ட்ரேயில் கலக்கிய மாவை ஸ்பூனால் எடுத்து சின்ன சின்ன தாக பரவலாக வைக்கவும். ஓவனில் 300 டிகிரி பாரன் ஹீட்டில் 20 நிமிடம் வைத்து பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)