சப்பாத்தியுடன் சாப்பிட சூரை மீன் குழம்பு செய்வது எப்படி?





சப்பாத்தியுடன் சாப்பிட சூரை மீன் குழம்பு செய்வது எப்படி?

0
மீன்கள் என்றாலே உடலுக்கு நன்மை தரக்கூடியது என்றாலும், அபார ருசியை தரக்கூடிய குழம்பு மீன்களில் ஒன்று தான், சங்கரா மீன். ஆங்கிலத்தில் ரெட் ஸ்னாப்பர் என்பார்கள். 
சப்பாத்தியுடன் சாப்பிட சூரை மீன் குழம்பு செய்வது எப்படி?
இதில் உள்ள சத்துக்களை பார்த்தாலே, இந்த மீனின் நன்மைகளை புரிந்து கொள்ளலாம். இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், தாமிரம், 

மாங்கனீசு, தாமிரம், செலினியம், தியாமின், நியாசின், பாந்தோத்தேனிக் அமிலம், ஃபோலேட், வைட்டமின் பி-12, வைட்டமின் A, E,போன்றவை இதில் அடங்கி உள்ளன. 
இதிலுள்ள செலினியம், வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிக்க செய்வதுடன், தைராய்டு ஆரோக்கியத்தையும் பெருக்குகிறது. இதிலுள்ள வைட்டமின் பி12, நரம்பு செல்களுக்கும், ரத்த சிவப்பணுக்களை பராமரிக்கவும் உதவுகிறது. 

இதிலுள்ள வைட்டமின் E, உடலின் தோல் பராமரிப்புக்கும், கண்களை பாதுகாக்கவும் உதவுகிறது. இதிலுள்ள வைட்டமின் A, உடலில் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
தேவையான‌ பொருட்கள் :

சூரை மீன் - ‍‍1/2 கிலோ 

பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது) 

தக்காளி -  2 நடுத்தர அளவு, பொடியாக நறுக்கப்பட்டது 

பச்சை மிளகாய் -  3 நறுக்கியது 

பூண்டு -  4-5 பல் (நறுக்கியது) 

புளி -  தேவையான அளவு 
மிளகாய் / குழம்பு மிளகாய்த் தூள் -  1 தேக்கரண்டி 

மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி 
மல்லித் தூள் -  1 தேக்கரண்டி 

எண்ணெய் -  தேவைக்கேற்ப 

கறிவேப்பிலை -  2 தண்டு 

தந்தூரி மசாலா -  1/2 டீஸ்பூன் 

சீரகம் தூள் -  1 தேக்கரண்டி 

உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
சூரை மீன் குழம்பு
சூரை மீன் துண்டுகளை நன்கு சுத்தம் செய்து, நீரில் கழுவி, நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.. 
ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காய த்தை போட்டு, பொன்னிற மாக வதக்கிக் கொள்ள வேண்டும். 

பின்பு இஞ்சி, பூண்டு, மஞ்சள் தூள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும் இப்போது உப்பு, மிளகாய் தூள், மல்லி தூள், தந்தூரி மசாலா, சீரகப் பொடி சேர்த்து, நன்கு கிளறி விட வேண்டும். 
அடுத்து நறுக்கிய தக்காளியை போட்டு, 2-3 நிமிடம் தக்காளி நன்கு வதங்கும் வரை வதக்கி விட வேண்டும். 

பின்னர் அதில் சூரை மீன்களை சேர்த்து ஒரு முறை கிளறி, தட்டு வைத்து 5-6 நிமிடம் மூடி வைத்து, பிறகு திறந்து அதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு கொதிக்க விட வேண்டும். 

குழம்பானது நன்கு கொதித்ததும், அதில் எலுமிச்சை சாறு சேர்த்து (தேவைப் பட்டால்) கிளறி இறக்கி விட வேண்டும்.
இப்போது சுவையான சூரை மீன் குழம்பு ரெடி!!! சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)