தினம் இரண்டு முட்டைகளை சாப்பிடுங்கள் !





தினம் இரண்டு முட்டைகளை சாப்பிடுங்கள் !

முட்டை உடம்புக்கு நல்லதல்ல, இதயத்துக்குக் கேடு, குருதி அழுத்தத்தை அதிகரிக்கும் இது, அது என அடுக்கடுக்காய் வைக்கப்படும் பல்வேறு பயமுறுத்தும் அறிக்கைகளால், 
தினம் இரண்டு முட்டைகளை சாப்பிடுங்கள் !
முட்டையை உண்ணலாமா வேண்டாமா என குழப்பத்தி லேயே இருக்கின்றனர் பெரும் பாலானோர். 
அவர்கள் அனைவரையும் ஒட்டு மொத்த ஆனந்தத்துக்கு உள்ளாக்கு கின்றன சமீப காலமாய் வெளியாகும் முட்டை குறித்த ஆராய்ச்சிகள். 

அவற்றில் ஒன்று “தினம் ஒரு முட்டை” உண்பது குருதி அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என சமீபத்தில் வெளியாகி யிருக்கும் ஆராய்ச்சி முடிவு ஒன்று.
உங்களின் ஞாபகத்துக்காக !
முட்டை தரும் புரோட்டீன்கள் குருதி அழுத்தத்தைக் குறைக்கப் பயன் படுத்தப்படும் மருந்துகளின் செயலையே செய்கின்றன என ஒரு விரிவான ஆய்வின் மூலம் நிரூபித்துக் காட்டி யிருக்கின்றனர். 

முட்டை வயிற்றில் உள்ள என்சைம் களுடன் கலந்து உருவாக்கும் புரோட்டீன்கள் குருதி அழுத்த த்தைக் குறைக்கப் பயன்படுத்தும் மருந்துகள் செய்யும்
அதே பணியையே அடிபிறழாமல் செய்கின்றன எனும் தங்களது ஆய்வு முடிவை வெளி யிட்டுள்ளனர் கனடாவின் ஆல்பர்டா பல்கலைக் கழக ஆய்வாளர்கள். 
முட்டையை வேக வைத்து என்றல்ல, பொரித்து முட்டை கலந்த அசைவ பலகாரஞ்களாக உட்கொள்வதும் சிறந்த பயனளிக்கிறது என்று சொல்லி முட்டை கலந்த அசைவ பலகாரப் (Omelet) பிரியர்களின் வயிற்றில் முட்டை வார்க்கின்றனர்.

இவர்கள். முட்டை உண்டால் உடலில் கொழுப்பு அதிகரிக்கும், இதய நோய்கள் வரும், 

அது இது என அச்சுறுத்திக் கொண்டிருந்த தகவல்களுக்கு இன்னொரு ஆராய்ச்சி முற்றுப் புள்ளி வைத்திருக்கிறது. 
உண்மையில் முட்டை உண்பது மாரடைப்பு போன்ற நோய்கள் வரக் காரணமாகாது. அதிலுள்ள கொழுப்பு ஆபத்தானதல்ல.
தினமும் சுடுநீர் குடிப்பது கிடைக்கும் நன்மைகள் !
மாமிசம், சீஸ் போன்றவையே தவிர்க்கப் பட வேண்டியவை. இன்னும் சொல்லப் போனால் தினம் இரண்டு முட்டைகளை உண்பது உடலுக்கு நல்லது.

உங்கள் எடை கட்டுக்குள் வைத்திருக்கக் கூட இது உதவும் என சிலிர்ப்பூட்டும் தகவல்களைச் சொல்லி முட்டைப் பிரியர்களை ஆனந்தக் கூத்தாட வைக்கின்றனர் இங்கிலாந்தைச் சேர்ந்த இன்னொரு ஆராய்ச்சிக் குழுவினர். 
வாரத்துக்கு மூன்று முட்டைகளே ஆரோக்கிய மானது என இங்கிலாந்து மருத்துவர்கள் நிர்ணயித்திருந்த 

கட்டுகளை யெல்லாம் அவிழ்த்து விட்டு, தினம் இரண்டு சாப்பிடுங்கள் என அறிவுறுத்த ஆரம்பித்திருக் கிறார்களாம்.
Tags: