நூடுல்ஸ் விலை மலிவாகவும், எளிதாகவும் கிடைக்கிறது. அது மட்டும் இல்லாமல் 2 நிமிடத்தில் செய்யலாம். 
சிம்பிள் சிக்கன் நூடுல்ஸ் செய்வது எப்படி?
இந்த உடனடி நூடுல்ஸ் நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பதால், அவை மிகவும் பதப்படுத்தப்பட்டவை ஆகும். 

நூடுல்ஸ் குறைவான  ஊட்டச்சத்து உள்ளடக்கி  உள்ளது. கொழுப்பு, கலோரி மற்றும் சோடியம் அதிகமாகவும் மற்றும் செயற்கை நிறங்கள், செயற்கை சுவையூட்டல் அதிகமாக பயன்படுத்தி உள்ளனர். 
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மோனோசோடியம் குளூட்டமைட் (MSG) மற்றும் மூன்றாம் நிலை-பியூடைல் ஹைட்ரோகுவினோன் (TBHQ) 

ஆகியவை  நூடுல்ஸ்யின் சுவையை மேம்படுத்துதல் மற்றும் பதப்படுத்துவதற்கு  பயன்படுகிறது. சரி இனி சிக்கன் கொண்டு சிம்பிள் சிக்கன் நூடுல்ஸ் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையானவை

சிக்கன் - 100 கிராம்

லூஸ் நூடுல்ஸ் - 1 பாக்கெட்

சர்க்கரை - 1/4 தேக்கரண்டி

சோயா சாஸ் - 1 தேக்கரண்டி

தக்காளி சாஸ் - 1 தேக்கரண்டி

வெங்காயம் - 100 கிராம்

பச்சை மிளகாய் - 2

மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி

உப்பு, எண்ணெய் - போதுமான அளவு
செய்முறை :
சிம்பிள் சிக்கன் நூடுல்ஸ் செய்வது எப்படி?
முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து, வேக வைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். அகலமான கடாயில் நீர் ஊற்றி நூடுல்சை வேக வைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய் ஆகிய வற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். பின் வேக வைத்த சிக்கன் மற்றும் நூடுல்ஸை சேர்க்கவும். 

சோயா சாஸ், தக்காளி சாஸ், மிளகுத் தூள் போதுமான அளவு உப்பு சேர்த்து கடைசியில் சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கவும். இப்போது சிக்கன் நூடுல்ஸ் ரெடி!