சுவையான மஞ்சள் பூசணி சூப் செய்வது எப்படி?





சுவையான மஞ்சள் பூசணி சூப் செய்வது எப்படி?

0
மஞ்சள் பூசணியைப் பறங்கிக்காய் என்பர். அதன் பொருள் பறை போல் உள்ள காய் என்பது. தமிழகத்தின் சில பகுதிகளில் அரசாணிக்காய் எனவும் அழைக்கப்படுகிறது
சுவையான மஞ்சள் பூசணி சூப் செய்வது எப்படி?
வெள்ளைநிறப் பூசணிக்காய் தான் பூசணிக்காய் என்னும் பெயரால் வழங்கப்படும்.

மஞ்சள் பூசணிகாயை சமைத்து சாப்பிட்டு வந்தால் இதில் உள்ள பெக்டின் என்னும் வேதிபொருள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் உதவுகிறது.

மஞ்சள் பூசணி ஜூஸ் செய்து அல்லது சமைத்து சாப்பிட்டு வருவதன் மூலம் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.
மஞ்சள் பூசணிகாய் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களுக்கு மிகவும் நல்லது. சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்பட மஞ்சள் பூசணிகாய் உதவுகிறது. 

மேலும் சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை பிரச்சனை உள்ளவர்கள் பூசணிக்காய் ஜூஸை தினமும் மூன்று வேளை அரை டம்ளர் அளவு தொடர்ந்து 10 நாட்கள் குடித்து வந்தால் இப்பிரச்சனை களிலிருந்து விடுபடலாம்.

என்னென்ன தேவை?

பொடியாக நறுக்கிய மஞ்சள் பூசணி – 1 டேபிள் ஸ்பூன்,

வெண்ணெய் – 4 டீஸ்பூன்,

சூடான பால் – 2 கப்,

மைதா – 2 டீஸ்பூன்,

மிளகுத் தூள், உப்பு – தேவைக்கு.

எப்படிச் செய்வது?
கடாயில் 2 டீஸ்பூன் வெண்ணெயை போட்டு மஞ்சள் பூசணியை 5 நிமிடத்திற்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். 

இத்துடன் உப்பு, தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். மற்றொரு கடாயில் 2 டீஸ்பூன் வெண்ணெயை போட்டு உருகியதும் மைதாவை போட்டு வறுத்துக் கொள்ளவும். 
பின்பு சூடான பால் சேர்த்து 5 நிமிடத்திற்கு கிளறவும். இத்துடன் வேக வைத்த பூசணிக்காய், மிளகுத் தூள் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, சூடாக பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)