சூப்பரான கிரீன் கிரேவி செய்வது எப்படி?





சூப்பரான கிரீன் கிரேவி செய்வது எப்படி?

0
சாம்பார், கூட்டு, பொரியல், புளிக்குழம்பு, பிரியாணிக்கான தொக்கு என்று தமிழர்கள் எந்த வெரைட்டியில் உணவை எடுத்துக் கொண்டாலும் அதில் தவறாமல் இடம்பெறும் மிக முக்கிய காயாக கத்திரிக்காய் இருக்கிறது.
கிரீன் கிரேவி
வெள்ளை நிற கத்திரிக்காய், பச்சை நிற கத்திரிக்காய், வயலெட் நிற கத்தரிக்காய் என்று வெவ்வேறு வண்ணங்களில், நம் மனம் கவர்ந்த சுவைகளில் கத்திரிக்காய் கிடைக்கிறது. 

பெயரளவில் இதனை காய் என்று குறிப்பிட்டாலும், இது பல வகையை சேர்ந்ததாக உள்ளது என்று தெரிவிக்கின்றனர். மலரும் செடியாக இருப்பதாலும், விதைகளைக் கொண்டிருப்பதாலும் இவ்வாறு குறிப்பிடப் படுகிறதாம். 
கத்திரிக்காயில் விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி உள்ளிட்ட ஆண்டிஆக்சிடன்ட் சத்துக்கள் மிகுதியாக இருக்கின்றது. கத்திரிக்காயில் மெக்னீசியம், மேங்கனீஸ், பொட்டாசியம் மற்றும் காப்பர் சத்துக்கள் நிறைவாக உள்ளன. 

இவை அனைத்தும் நம் எலும்புகளை வலுப்படுத்தும் மற்றும் எலும்புகளில் உள்ள அடர்த்தியை மேம்படுத்தும். நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் ரத்த சர்க்கரை அளவை சீரான நிலையில் வைத்திருக்க கத்திரிக்காய் சாப்பிடலாம். 

இது குடல் நலனை மேம்படுத்தும். அது மட்டுமல்லாமல் உடலில் ரத்த சர்க்கரையை குறைக்க ஏதுவான இன்சுலின் உற்பத்தியை கத்திரிக்காய் ஊக்குவிக்கும்.

இளம் கத்தரிக்காய்கள், காரமான வாட்டர் செஸ்நட்கள், காரமான தேங்காய்ப்பால் இதில் சேர்க்கப் பட்டுள்ளன.
தேவையானவை :
கிரீன் கறி பேஸ்ட் - 40 மில்லி 

எண்ணெய் - 15 மில்லி 

தேங்காய்பால் - 150 மில்லி 

காய்கறி கலவை - 100 மில்லி 

ஆய்ஸ்டர் சாஸ் - 30 மில்லி 

சோயா சாஸ் - 15 மில்லி 

பனை வெல்லம் - 20 கி. 

ஆபர்ஜைன், சதுரமாக்கப் பட்டது - 50 கி. 

இளம் கத்தரிக்காய், சதுரமாக்கப் பட்டது - 50 கி. 

வாட்டர் செஸ்நட் - 50 கி. 

பாம் ஹார்ட்ஸ் - 50 கி. 

காஃபிர் எலுமிச்சை இலைகள் - 10 கி. 

சிவப்பு மிளகாய்கள் - 15 கி. 

உப்பு மற்றும் மிளகு சுவைக்கேற்ப

ஸ்வீட் பேசில் - 25 கி. மற்றும் 

ஹாட் பேசில் - 15 கி.  அழகு படுத்துவதற்காக
செய்முறை

எண்ணெயில் கிரீன் கறி பேஸ்ட்டை இட்டு எண்ணெய் மேலே மிதக்கும் வரை அதை நன்றாக வதக்கிக் கொள்ளவும். தேங்காய் பால், இதர விழுதை சேர்த்து கொதி நிலைக்கு கொண்டு வரவும். 

சாஸையும் பனை வெல்லத்தையும் சேர்த்து சமைக்கவும். அனைத்து காய்கறி களையும், வாட்டர் செஸ்நட் மற்றும் பாம் ஹார்ட்ஸுடன் சேர்த்து பதமாகும் வரை சமைக்கவும்.
அயோடின் சத்தும் அதன் குறைபாட்டால் ஏற்படும் நோய்களும் !
மீதமுள்ள சீசனிங்கையும் அவற்றுடன் சேர்த்து, பேசில் இலைகளை தூவி தாய் சைவ கிரேவியை சூடாக பரிமாறவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)