சைனீஸ் சிக்க‌ன் வெஜ் பிரெட் சாண்ட்விச் செய்முறை / Chinese Chicken Wage Fred Sandwich Recipe !





சைனீஸ் சிக்க‌ன் வெஜ் பிரெட் சாண்ட்விச் செய்முறை / Chinese Chicken Wage Fred Sandwich Recipe !

0
தேவையானவை

சிக்கன் போன்லெஸ் - 150 கிராம்

கேபேஜ் - கால் கப்

கேரட் - இரண்டு மேசை கரண்டி

கேப்ஸிகம் - ஒரு மேசை கரண்டி

பச்ச மிளகாய் - ஒன்று

வொயிட் பெப்பர் (அ) பிளாக் பெப்பர் - ஒரு தேக்கரண்டி

உப்பு - தேவைக்கு

வெங்காயம் - ஒன்று

பிரெட் வெங்காய தாள் - இரண்டு ஸ்டிக்

பூண்டு - இரண்டு பல்

சோயா சாஸ் - ஒரு தேக்கரண்டி

சர்க்கரை - அரை தேக்கரண்டி

லெட்டியுஸ் இலை - மூன்று மேசை கரண்டி

செய்முறை :
சைனீஸ் சிக்க‌ன் வெஜ் பிரெட் சாண்ட்விச்

முதலில் கேபேஜ், கேரட் நீளவாக்கில் அரிந்து வைக்க வேண்டும்.

பின் லெட்டியுஸ், கேப்ஸிகம், பச்ச மிளகாய், பூண்டு வெங்காயம் பொடியாக நருக்கி வைக்க வேண்டும். 

பின் சிக்கனை சின்ன சின்ன துண்டுகளாக போட்டு அதில் பாதி மிளகு தூள், சோயா சாஸ் அரை தேக்கரண்டி, 

சிறிது உப்பு போட்டு குக்கரில் வேக வைத்து தண்ணீரை வடித்து உதிர்த்து கொள்ள வேண்டும்

பின் ஒரு நான் ஸ்டிக் பேனை காய வைத்து இரண்டு ஸ்பூன் எண்னை அல்லது பட்டர் ஊற்றி சர்ர்கரை, பூண்டு பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். 

வெங்காயம் போட்டு வதக்கவும். அடுத்து கேரட் மற்றும் கேபேஜை போட்டு வதக்கவும்.

எல்லாம் இரண்டு இரண்டு நிமிடம் வதக்கினால் போதும். பின் ரொம்ப வேக தேவை யில்லை.

இப்போது உதிர்த்து வைத்துள்ள சிக்கன், கேப்ஸிகம், லெட்டியுஸ் இலை மீதமுள்ள மிளகு தூள், உப்பு, சிறிது எல்லாம் போட்டு வதக்கவும். 

சிறிது நேரம் வதக்கி இரக்கி ஆற விடவும்.

இந்த பில்லிங்கை பிரெட் ம‌ற்றும் ப‌ண்ணிலும் வைத்து ஈசியாக‌ சாண்ட்விச் த‌யாரித்து கொள்ள‌லாம். 
சைனீஸ் சிக்க‌ன் வெஜ் பிரெட் சாண்ட்விச்

அப்ப‌டியே பிள்ளைக‌ளுக்கு பிரெட்டில் ஒரு சைட் கெட்ச‌ப்பும், ம‌று ப‌க்க‌ம் 

இந்த‌ பில்லிங்கையும் வைத்து மூடி அழுத்தி விட்டு, முக்கோண‌ வ‌டிவில் க‌ட் ப‌ண்ண‌வும்.

சுவையான சைனீஸ் சிக்க‌ன் வெஜ் பிரெட் சாண்ட்விச் ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)