பிரவுனி கேக் செய்முறை | Piravuni Cake !





பிரவுனி கேக் செய்முறை | Piravuni Cake !

0
தேவையானவை:

மைதா மாவு – ஒரு கப்,

வெண்ணெய் – அரை கப்,

முட்டை – 2 (முட்டை விரும் பாதவர்கள் அரை டின் கண்டன்ஸ்ட் மில்க் சேர்த்து, சர்க்கரை யில் பாதி அளவை குறைத்துக் கொள்ளலாம்), 

சாக்லெட் சிப்ஸ் – 3/4 கப்,

கொக்கோ பவுடர் – இரண்டரை டேபிள்ஸ்பூன்,

இன்ஸ்டன்ட் காபித்தூள் – அரை டீஸ்பூன்,

பொடித்த சர்க்கரை – 3/4 கப்,

பாதாம் அல்லது வால்நட்ஸ் – தேவைக்கேற்ப,

உப்பு – கால் டீஸ்பூன்.

செய்முறை:
பிரவுனி கேக் செய்முறை
ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் சாக்லெட் சிப்ஸ் சேர்த்து டபுள் பாய்லர் முறையிலோ அல்லது அவனிலோ (40 நொடிகள் போதும்) உருக்கவும்.

உருகியதும் கரண்டியால் நன்கு கலக்கி ஆறவிட்டு, அதில் முட்டை சேர்த்து நன்கு அடித்துக் கலக்கி, மைதா மாவு 

மற்றும் கோக்கோவைச் சலித்துச் சேர்த்து, அத்துடன் மற்ற பொருட்களை யும் சேர்த்து ஒன்று சேர கரண்டி யால் நன்கு கலக்கவும். 

பேக் செய்யும் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி அதில் சிறிது மைதா மாவைத் தூவி 

எல்லா இடங்களிலும் ஒட்டும்படி செய்து விட்டு மீதியைக் கொட்டி விடவும். அவனை 180 டிகிரி செல்சியஸில் ப்ரீஹீட் செய்யவும். 

கலவையை பேக்கிங் ட்ரேயில் பரவலாக சமப்படுத்தி, மேலே பாதாம் பருப்பைப் பொடித்துத் தூவி, 35 முதல் 40 நிமிடங்கள் வரை 

அவரவர் அவனைப் பொறுத்து பேக் செய்து எடுக்கவும் (35 நிமிடங் களுக்கு மேல் குச்சியால் நடுவில் குத்திப் பார்த்து எடுக்கவும்). 

குறிப்பு: 

இது ஃப்ரிட்ஜில் வைக்காமலேயே ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். மறுநாள் தான் இதன் சுவை கூடுதலாக இருக்கும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)