தேவையானவை:

வெண்டைக்காய் – கால் கிலோ,

வெல்லம் – 50 கிராம்,

புளி – சுண்டைக்காய் அளவு,

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை, 

எண்ணெய் – 3 டீஸ்பூன்,

உப்பு – தேவையான அளவு.

தாளிக்க:

கடுகு – ஒரு டீஸ்பூன்,

காய்ந்த மிளகாய் – 2,

உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:
வெண்டைக்காய் ஸ்வீட் பச்சடி

வெண்டைக்காயை சின்னச் சின்ன வில்லை களாக நறுக்கவும். 

வாணலியில் எண்ணெய் விட்டு, வெண்டைக்காயை வதக்கி, புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும்.

முக்கால் பதம் வெந்ததும் வெல்லத்தைப் பொடித்துச் சேர்க்கவும். 

தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்து, பச்சடியில் சேர்த்து இறக்கவும். 

விருப்பப் பட்டால், 3 டீஸ்பூன் தேங்காய் துருவலை சேர்க்கலாம்.

குறிப்பு:

வெண்டைக்காய் மூளை வளர்ச்சிக்கும், ஞாபக சக்திக்கும் மிகவும் ஏற்றது.