ஸிலோன் எக் பரோட்டா செய்வது | Ceylon Egg Parotta Recipe !

புதிய பதிவினை உடனடியாக பெற Email மூலம் Subscribe செய்யுங்கள்..

லைக் பண்ணுங்க... "
தேவையான பொருட்கள்

மைதா மாவு 500 கிராம்

தயிர் 3 தேக்கரண்டி

பேக்கிங் பவுடர் அரை தேக்கரண்டி

வெண்ணெய் 3 தேக்கரண்டி

முட்டை 2

உப்பு தேவையான அளவு

கொத்துக்கறி மஸாலாவிற்கு தேவையான பொருட்கள்

கொத்துக் கறி 500 கிராம்

பெரிய வெங்காயம் 2

பூண்டு 4 பல்

மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி

பச்சை மிளகாய் 2

மிளகாய் தூள் 1 தேக்கரண்டி

சீரகத் தூள் 1 தேக்கரண்டி

உப்பு தேவையான அளவு

இதயம் நல்லெண்ணெய் 4 மேஜைக் கரண்டி

செய்முறை:

கொத்தக் கறியுடன் மஞ்சள் தூள், சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 
ஸிலோன் எக் பரோட்டா செய்வது

வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு போட்டு வதக்கி, கொத்துக் கறியைப் போட்டு கிளறவும்.

மிளகாய்த் தூள், சீரகத் தூள், உப்பு போட்டுக் கிளறி நன்றாக வதக்கி, கெட்டியானதும் இறக்கி வைக்கவும். 

பரோட்டா செய்முறை: 

மைதா மாவுடன் உப்பு, பேக்கிங் பவுடர், வெண்ணெய், தயிர் இவற்றைப் போட்டுக் கலந்து, பிசைந்து இருபது நிமிடங்கள் ஊற விடவும்.

முட்டையுடன் சிறிது உப்புத் தூள் கலந்து அடித்துக் கொள்ளவும். மாவில் இருந்து சிறிதளவு எடுத்து உருண்டை யாக்கி, பூரிப்பலகை மீது வைத்து, மிக மெல்லியதாக விரிக்கவும். 

தோசைக் கல்லை காய வைத்து, விரித்த மாவைப் போட்டு, முட்டையை கரண்டியில் எடுத்து பரவலாக தடவவும்.

கொத்துக்கறி மஸாலாவை இதன் மீது பரப்பவும். மாவை, இடது பக்கமும், வலது பக்கமும் மடக்கி மூடவும். கவனமாக திருப்பிப் போட்டு, பொன்நிற மானதும் எடுத்துப் பரிமாறவும்.

COMMENTS

COMMENTS
Copyright © 2020 www.esamayal.com. All rights reserved
close
𝙎𝙩𝙖𝙮 𝙃𝙤𝙢𝙚 🏠 𝙎𝙩𝙖𝙮 𝙎𝙖𝙛𝙚