தேவையானவை: 

தேங்காய்த் துருவல் - ஒரு கப், 

கருப்பட்டி (அ) வெல்லம் - ஒரு கப், 

மைதா மாவு - 3 கப், 

தேங்காய்ப்பால் அரை டம்ளர், 

சர்க்கரை - அரை டீஸ்பூன், 

பாண்டன் இலை - 5 + பாதி இலை, 

பேக்கிங் சோடா - அரை டீஸ்பூன், 

முந்திரி - 10, 

நெய், உப்பு - தேவைக் கேற்ப.

செய்முறை: 
குயே ததார் (கோகனட் ரோல்)
தேங்காய், முந்திரி யைப் பொடியாக துருவவும். 

ஒன்றிர ண்டாக உடைத்த கருப் பட்டி யுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து, பாண்டன் இலை பாதியை நறுக்கி அதில் சேர்த்து, கருப்பட்டி கரையும் வரை காய்ச் சவும். 
கரைந் ததும் வடிகட்டி ஒரு பாத்தி ரத்தில் சேர்த்து, அதனுடன் துருவிய தேங்காய், முந்திரி சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும். 

லேசான பிசு பிசுப்புடன் கெட்டி யானதும் இறக்கவும். மற்றொரு பாத்திர த்தில் மைதா மாவுடன் தேவை யான அளவு உப்பு, சர்க்கரை, பேக்கிங் சோடா எடுத்து வைக்கவும். 

பாண்டன் இலை யுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து, வடிகட்டி, அதை மாவில் சேர்க்கவும். 
அத்துடன் தேங்காய்ப் பால், ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து, கெட்டி யில்லாமல் தோசை மாவு பதத்தில் கரைக் கவும். 

தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, ரவா தோசை க்கு ஊற்றுவது போல மாவை ஓரத்தி லிருந்து ஊற்றி நடுவுக்கு கொண்டு வந்து, சிறிய தோசை களாக வார்க் கவும். 

நெய் தடவி, மிதமான சூட்டில், அடி மிகவும் சிவக்காத வாறு சுட்டு எடுக்கவும் (திருப்பிப் போட வேண்டாம். சீக்கிரம் வெந்து விடும்). 

சுட்ட தோசை யின் நடுவில் தேங்காய்க் கல வையைக் கொஞ்சம் பரப்பி வெளியே வராத வாறு சுற்றி வைத்து, சுவைக் கவும்.