காப்சிகம் பேபிகார்ன் நூடுல்ஸ் செய்வது எப்படி? | Capsicum Baby Corn Noodles Recipe !

காப்சிகம் பேபிகார்ன் நூடுல்ஸ் செய்வது எப்படி? | Capsicum Baby Corn Noodles Recipe !

நூடுல்ஸ் என்றாலே தனிச்சுவை தான். காப்ஸிகம் பேபி கார்ன் நூடுல்ஸ் ஒரு வித்தியாச மான சுவையுடன் மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றது.
காப்சிகம் பேபிகார்ன் நூடுல்ஸ்
தேவையானவை

சைனீஸ் நூடுல்ஸ் – 2 பாக்கெட்

காரட், காப்சிகம், பேபி கார்ன் – 2 கப் (நீள வாக்கில் நறுக்கியது)

பச்சை மிளகாய் – 2

இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

சோயா சாஸ் – 1 டீஸ்பூன்

அஜினமோட்டா – 1/4 டீஸ்பூன்

வெள்ளை மிளகு பவுடர் – 1/4 டீஸ்பூன்

சோள மாவு – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

* சைனீஸ் நூடுல்ஸை சிறிது உப்பு சேர்த்து உதிரியாக வேக விட்டு எடுத்துக் கொள்ளவும்.

* வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பெரிய வெங்காயம், பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கி வதக்கவும்.

* அத்துடன் காய்கறி கலவையை சேர்த்து, இஞ்சி பூண்டு விழுது, மிளகு பவுடர், சோள மாவு, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

* வதங்கியதும் அஜினாமோட்டா, சோயா சாஸ் சேர்த்து நன்கு கிளறவும். அத்துடன் வேக வைத்த நூடுல்சை சேர்த்து கிளறி சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு

* கடையில் விற்கும் ரெடிமேட் மசாலா நூடுல்ஸ் பாக்கெட் என்றால் நறுக்கிய காய்கறி, வெங்காயம், 

பச்சை மிளகா யுடன், மசாலா பவுடரை சேர்த்து நெய் விட்டு வதக்கி, வதங்கியதும் வேக வைத்த நூடுல்ஸை சேர்த்துக் கிளறவும். 

இதற்கு அஜினமோட்டோ சேர்க்கத் தேவை யில்லை.
Tags: