புதுமையான மல்லி சிக்கன் செய்வது எப்படி?





புதுமையான மல்லி சிக்கன் செய்வது எப்படி?

கொத்தமல்லி அல்லது தனியா இந்திய உணவுகளில் அதிகம் பயன்படுத்தப் படுகிறது. இந்த மசாலாப்பொருள் இல்லாமல் எந்த சமையலறையையும் கற்பனை செய்து பார்க்க முடியாது. 
மல்லி சிக்கன்
இது ஒரு தனித்துவமான நறுமணத்தைக் கொண்டுள்ளது, இது ஒவ்வொரு உணவையும் மகிழ்விக்கும். மேலும், இது சுவை அளிப்பதோடு, மருத்துவ குணங்கள் மற்றும் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

கொரோனா வழிகாட்டுதல்களில், ஆயுஷ் அமைச்சகம் கொத்த மல்லியை வெது வெதுப்பான நீரில் உட்கொள்வது ஆரோக்கியமான உணவுப் பழக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கொத்தமல்லி சிறந்தது. கொத்த மல்லியில் உள்ள ஆன்டி - ஆக்ஸிடன்ட்கள் உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தவும் குறைக்கவும் உதவுகின்றன.

கொத்தமல்லி இலையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது மற்றும் நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. இது உடலின் நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது.

சிக்கன் குழம்பு வகைகளில் தனியா சிக்கன் வகை கொஞ்சம் புதுமையானது. அதிக சுவையானது. செய்து பார்த்து சுவையை அனுபவியுங்களேன்.
தேவையான பொருட்கள்:

சிக்கன் துண்டுகள் -1 கிலோ

கொத்தமல்லி இலை -2 கட்டு (சுத்தம் செய்து நறுக்கியது)

புதினா இலை -1 கட்டு (சுத்தம் செய்து நறுக்கியது)

வெங்காயம் -3 (நறுக்கியது)

இஞ்சி, பூண்டு விழுது- 2 டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 4 (நறுக்கியது)

தயிர் – 250 மில்லி லிட்டர்

தனியா தூள் – 3 டீஸ்பூன்

சீரகத்தூள் – 11/2 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:

தயிரில் பாதி அளவு மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து கலந்து சிக்கனை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு, இஞ்சி விழுதை வதக்கவும். 

பச்சை மிளகாய், சீரகம், தனியா தூள் சேர்த்து கிளறவும். சிக்கன் துண்டுகளை வடித்து கடாயில் சேர்த்து அதிக பட்ச தீயில் 5 நிமிடங்கள் வேக வைக்கவும். 

மீதமுள்ள தயிரை சேர்க்கவும். அதோடு கொத்த மல்லி இலை, புதினாவை சேர்த்து கிளறவும். மூடியை மூடி சிக்கன் வேகும் வரை குறைந்த தீயில் வைத்திருக்கவும். 
மார்பகப் புற்று நோய்க்கும் எலும்புக்கும் உள்ள தொடர்பு !
வெந்ததும் இறக்கி பரிமாறவும். இப்போது சூடான தனியா சிக்கன் ரெடி.
Tags: