அரிதானப் பழங்களின் மருத்துவ குணங்கள் !

அரிதானப் பழங்களின் மருத்துவ குணங்கள் !

0

பழங்கள் உடலுக்கு நேரடியாக சத்துக்களைக் கொடுக்கும் தன்மை கொண்டவை. பழங்களில் உள்ள உயிர் சத்துக்களான வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் உடலுக்கு வலுவூட்டுகின்றன. 

அரிதானப் பழங்களின் மருத்துவ குணங்கள் !

இதில் உள்ள நார்ச்சத்துகள் குடலுக்கு நல்லது. இப்போதெல்லாம் சில அரிய வகைப் பழங்கள் சந்தையில் நம்மால் பார்க்க முடிகிறது. அவற்றில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருக்கின்றன. 

சாதாரணமாக சந்தைகளில் கிடைக்கும் பழங்களில் உள்ள சத்துக்களை நாம் அதிகம் தெரிந்திருப்போம். 

ஆனால் அரிய வகைப் பழங்களான இலந்தைப்பழம், வேப்பம்பழம், களாப்பழம் போன்றவைகளிலும் ஏராளமான சத்துக்களும், மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன. அவற்றை தெரிந்து கொள்வோம்.

இலந்தைப்பழம்:

இலந்தைப்பழம்

சிறிய அளவில் சிவந்த நிறத்துடன் காட்சியளிக்கும் இலந்தைப் பழத்தில் சிறிதளவே சதை காணப்படும். அதிக இடத்தை கொட்டை தான் அடைத்துக் கொண்டிருக்கும். 

கிராமப்புறங்களில் கரிசல் காடுகளில் தானாக முளைத்து வளரக்கூடிய முட்செடியில் இந்த பழம் பழுத்திருக்கும்.

இனிப்பும், புளிப்பும் கலந்த ருசியுடன் காணப்படும் இப்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ சத்தும் சுண்ணாம்புச் சத்தும் அதிகம் காணப்படுகின்றன. 

உடல் வளர்ச்சிக்கும், எலும்புகள் பலம் பெறவும் இலந்தைப்பழம் உதவிபுரிகிறது. இது உடல் உஷ்ணத்தை சமப்படுத்தும். 

தொடர்ந்து இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும். அடிக்கடி வாந்தி ஏற்படுவதை கட்டுப்படுத்தும்.

களாப்பழம்:

களாப்பழம்

வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் களாப்பழம் கருநிறத்துடன் முட்டை வடிவத்தில் காணப்படும். களாக்காயாக இருக்கும் போது ஊறுகாய் போட பயன்படுகிறது. 

இது புளிப்புச் சுவையுடன் காணப்படும். நன்றாக கனிந்த களாப்பழம் இனிப்புச் சுவை கொண்டது. இதில் வைட்டமின் ‘ஏ’ அதிக அளவில் உள்ளது. 

ஜீரண சக்தியை அதிகரிக்கும் தன்மை களாப்பழத்திற்கு உண்டு. உணவு உண்டபின் இந்த பழம் சாப்பிட்டால் உணவு எளிதில் ஜீரணமாகி நன்றாக பசியெடுக்கும். 

உடல் உஷ்ணம் காரணமாக தொண்டையில் ஏற்படும் வலியை களாப்பழம் குணப்படுத்துகிறது. உடல் சூட்டினை சமன்படுத்தும் தன்மை களாப்பழத்திற்கு அதிகம் உண்டு.

ஆல்பக்கோடா பழம்:

ஆல்பக்கோடா பழம்:

தமிழ் நாட்டு மருந்து கடைகளில் மட்டுமே கிடைக்கும் இந்த பழம் கருநிறமாக இலந்தைப்பழம் அளவில் இருக்கும். அதிக புளிப்புச்சுவை கொண்ட இந்த பழத்தில் வைட்டமின் ‘ஏ’, ‘பி’ உயிர்ச் சத்துக்களும், சுண்ணாம்புச் சத்தும் அதிகம் காணப்படுகின்றன. 

இது உடலுக்குப் பலத்தைத் தரும். இரத்தத்தை விருத்தி செய்யும். காய்ச்சலின் போது இந்த பழத்தைச் சாப்பிட்டால் உடல் சூட்டினை தணிக்கும். வாய்க்கசப்பைப் போக்கும். 

நாவறட்சி மாறும். வாந்தியை நிறுத்தும். தலை வலியை குணப்படுத்தும். சொறி, சிரங்கு உள்ளவர்கள் இந்த பழத்தைச் சாப்பிட்டால் சொரி, சிரங்கு உடனடியாக குணமடையும்.

வேப்பம்பழம்:

வேப்பம்பழம்

வேப்ப மரத்தின் பழங்களை அனைவரும் விரும்பி சாப்பிடுவதில்லை. நன்றாக முற்றி மரத்திலிருந்து தானாகவே கீழே விழும். பழங்கள் நன்றாக இனிப்பாக இருக்கும்.

வேப்பம் பழம் பித்தத்தை தணிக்கும் தன்மை கொண்டது. எந்த நோயும் வராமல் பாதுகாக்கும். இது பித்தத்தை தணிக்கும். சொரி, சிரங்கு மற்றும் தோல்நோய்களை குணப்படுத்தும்.

பழம் உதிரும் சீசனில் நன்றாக கனிந்த பழங்களை சேகரித்து அதை நீர் விட்டு கழுவி தோலையும், கொட்டையும் எடுத்து விட்டு சுத்தமான துணியில் வடிகட்டி எடுக்கவும். 

எந்த அளவிற்கு பழச்சாறு இருக்கிறதோ அந்த அளவிற்குச் சர்க்கரையைச் சேர்த்து சுத்தமான களிம்பு ஏறாத பாத்திரத்தில் விட்டு, அதை அடுப்பில் வைத்து நன்றாக காய்ச்ச வேண்டும். 

பாகுபதம் வந்த சமயம் இறக்கி வைத்து ஆறிய பின் பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டு தினமும் காலை, மாலை இரண்டு வேலை சாப்பிட்டு வந்தால் சருமம் தொடர்பான வியாதிகள் குணமடையும். பித்தம் தொடர்பான நோய் தீரும்.

டிராகன் பழம்:

டிராகன் பழம்

விந்தையான தோற்றம் கொண்ட இப்பழம், தித்திக்கும் சுவையை அளிப்பது. இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க டிராகன் பழம் உதவுகிறது.

டிராகன் பழம் உடம்புக்கு நல்ல குளிர்ச்சியை தரக் கூடியது. இப்பழத்தில் ஆன்டி ஆக்சிடன்டுகள் இருப்பதால், புற்றுநோய் வருவதைத் தடுக்கிறது.

டிராகன் பழம் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இதயத்தில் உள்ள ரத்த நாளங்களை நன்றாகச் செயல்பட வைக்கிறது.

வைட்டமின் பி 3 இருப்பதால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் குறைத்து, பருமன் இல்லாத சீரான உடலமைப்பை உருவாக்குகிறது.

ரம்புட்டான் பழம்:

ரம்புட்டான் பழம்:

ரம்புட்டான் பழம் தெற்காசியாவை தாயகமாகக் கொண்டது. இந்தப் பழத்தில் புற்று நோயை எதிர்த்துப் போராடும் பொருள் நிறைந்துள்ளது. எனவே இது நீரிழிவு மற்றும் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. 

ரம்புட்டான் பழம் இரும்புச் சத்தின் மூலமாகக் கருதப்படுகிறது. இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் இரத்த சோகை, சோர்வு, மயக்கம் ஆகியவற்றை இப்பழத்தினை உண்டு சரி செய்யலாம்.

இப்பழத்தில் உள்ள புரோடீன்கள் மற்றும் கார்போ ஹைட்ரேட்டுகள் இப்பழத்தினை உண்ட உடன் உடனடி ஆற்றலை வழங்குகின்றன.

கிவி பழம் :

கிவி பழம்

கிவி பழமும் மிகவும் சுவையானது. இப்பழத்தில் வைட்டமின் சி அதிகமாக நிறைந்துள்ளதால், கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது.

கிவி பழம் நோய் எதிர்ப்பு சக்தியை தரும் திறன் கொண்டது.உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி வீரியமிக்கதாக இருக்க தினமும் கிவி பழங்களை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி மிகும்.

கிவி பழத்தில் வைட்டமின் ஈ சக்தி நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் உடலின் நலத்திற்கும், குறிப்பாக கண் பார்வையின் நலத்திற்கு மிகவும் அவசியமாகும். 

கண் பார்வை மங்குதல், மாலை கண் நோய் போன்றவை ஏற்படுவதை தடுத்து கண்களில் இருக்கும் செல்களின் வளர்ச்சியை அதிகரிக்க செய்து கண் பார்வை திறனை பிரகாசிக்க செய்கிறது.

ஆலிவ்:

ஆலிவ்

பல்வேறு நிறங்களில் உள்ள ஆலிவ் பழங்களில் கருப்பு மற்றும் பச்சை நிறமுள்ள ஆலிவ் பழங்கள் தான் மிகவும் சிறந்தவை. இவற்றை உட்கொண்டால் எலும்புகள் வலிமையடையும், புற்றுநோய் தடுக்கப்படும். 

இதன் கொழுப்பு முழுக்க மோனோ சேச்சுரேட்டட் கொழுப்பு வகையை சார்ந்தது என்பதால் இது கொலஸ்டிராலை குறைக்கும் தன்மை உடையது. 

ஆலிவில் ஏராளமான பைட்டோநியுட்ரியண்டுகள் உள்ளன. இவை செல்கள் ஆக்சிஜனேற்றத்தால் பாதிக்கபடுவதை தடுத்து செல்களை காப்பாற்றுகின்றன.

பேசன் பழம்:

பேசன் பழம்

பிரேசிலை தாயகமாகக் கொண்ட இந்தப் பழம், நார்ச்சத்து அதிகம் நிறைந்த மென்மையான சதைப் பகுதியைக் கொண்டது. 

இது புற்றுநோய் மற்றும் தூக்கமின்மை பிரச்சினையை குணமாக்குவதில் மிகவும் சிறந்தது. சர்க்கரை நோய்க்கும் நிவாரணியாகச் செயல்படுகிறது. வைட்டமின் ஏ,பி,சி என அனைத்தும் நிரம்பிய இவ்வகைப் பழங்களை அப்படியே சாப்பிடலாம்.

மங்குஸ்தான் பழம்:

மங்குஸ்தான் பழம்

ஸ்ட்ராபெர்ரி சுவையில் இருக்கும் இந்த மங்குஸ்தான் பழம் சிறந்த மருத்துவ குணம் கொண்டது. குறிப்பாக இது வயிற்றுப் போக்குக்கு உடனடி தீர்வளிக்கிறது. பொதுவாக கண்கள் வறட்சி அடைந்து கண் எரிச்சலை உண்டாக்கும்.

இதனால் சிலர் தலைவலி, கழுத்து வலி என அவதிக் குள்ளாவார்கள். இவர்கள் மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் நரம்புகள் புத்துணர்வு பெறும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)