கீரை வித் சீஸ் முட்டை ஆம்லெட் செய்முறை !





கீரை வித் சீஸ் முட்டை ஆம்லெட் செய்முறை !

0
கீரைகளில் வைட்டமின் K, வைட்டமின் C, வைட்டமின் A, ஃபோலேட், இரும்பு சத்து மற்றும் கால்சியம் போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளது. 
கீரை வித் சீஸ் முட்டை ஆம்லெட்
கீரைகளை தினமும் சாப்பிடுவது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு உதவுகிறது. அதோடு கீரைகள் நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுவடையச் செய்து நமக்கு தேவையான ஆற்றலை வழங்குகின்றன. 

கீரை வகைகளில் காணப்படும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் நமது செல்களுக்கு ஏற்படக்கூடிய சேதங்களை தடுக்கிறது. இதனால் நாள்பட்ட நோய்களுக்கான அபாயம் குறைகிறது. 
கீரையில் உள்ள ஃபோலேட், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் ரத்த அழுத்தத்தை சீராக்கி, இதய அமைப்பின் செயல்பாட்டிற்கு ஆதரவு தருகிறது. இதன் மூலமாக இதய ஆரோக்கியம் மேம்படுத்தப் படுகிறது. 

கீரைகளில் குறைந்த அளவு கலோரிகளும், அதிக அளவு நார்ச்சத்தும் இருப்பதால் பசியை கட்டுப்படுத்தி செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலமாக உடல் எடையை பராமரிப்பதற்கு உதவுகிறது.

தேவையான பொருட்கள் :
முட்டை – 3 (வெள்ளை கரு மட்டும்)

உப்பு – தேவைக்கு

மிளகு தூள் – 1 தேக்கரண்டி

கீரை – 1 கையளவு

தக்காளி – சிறியது 1

வெங்காயம் – 1

சீஸ் – 1/4 கப்

ஆலிவ் எண்ணெய் – தேவைக்கு

செய்முறை :

தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். சீஸை துருவிக் கொள்ளவும். 

ஒரு கிண்ணத்தில் முட்டையின் வெள்ளை கரு, கீரை, மிளகு, உப்பு ஆகிய வற்றை சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு கடாயில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி நடுத்தர வெப்பத்தில் வைத்து முட்டை கலவையை கடாயில் ஊற்றி 
4 நிமிடங்கள் வேக வைத்து அகன்ற கரண்டி ஒன்றை எடுத்து 2 ஆக மடித்து கொள்ள வேண்டும்.  

பின்னர் வெப்பத்தை குறைத்து சீஸ் மற்றும் தக்காளியை தூவி முட்டையை இரண்டு பக்கம் திருப்பி போட்டு சீஸ் உருகியதும் ஒரு நிமிடம் வேக வைத்து பரிமாறவும்.
கீரை வித் சீஸ் முட்டை ஆம்லெட் ரெடி.
குறிப்பு: 

உங்களுக்கு விருப்பமான எந்த கீரையை வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளலாம். விருப்பம் இருந்தால் காளான்கள், சூடு படுத்தப்பட்ட ப்ரோக்கோலி ஆகிய வற்றை சேர்த்துக் கொள்ளலாம். 
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)