தேவையானவை:
கடலை மாவு, பொட்டுக் கடலை மாவு – தலா அரை கப்,
கோதுமை மாவு – 2 டேபிள்ஸ்பூன்,
பெரிய வெங்காயம், தக்காளி – தலா 2 (மிகவும் பொடியாக நறுக்கவும்),
நறுக்கிய கொத்த மல்லித் தழை – சிறிதளவு,
மிளகுத் தூள், சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,
சமையல் சோடா – ஒரு சிட்டிகை,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை:
உப்பு, எண்ணெய் நீங்கலாக மற்ற எல்லாவ ற்றையும் நன்கு கலக்கவும். அதனுடன் தேவை யான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்தில் நன்கு கரைக்கவும்.
அடுப்பில் தோசைக் கல்லை வைத்து எண்ணெய் தடவி, மாவை சின்னச் சின்ன ஆம்லெட்டு களாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, வேக விட்டு எடுக்கவும்.