செட்டிநாடு முட்டை குழம்பு செய்முறை / Chettinad Egg Salad Recipe !





செட்டிநாடு முட்டை குழம்பு செய்முறை / Chettinad Egg Salad Recipe !

உங்கள் சுவையை தூண்டும் செட்டிநாடு முட்டை குழம்பு சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் 
செட்டிநாடு முட்டை குழம்பு
ருசியான செட்டிநாடு முட்டை குழம்பு ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!

தேவையானவை

முட்டை – 5

அரைக்க:

சின்ன வெங்காயம் – 10 (அல்லது) பெரிய வெங்காயம் – 1

இஞ்சி – 1 துண்டு

பூண்டு – 7

வர கொத்தமல்லி – 3 தேக்கரண்டி

சீரகம் – 1 1 /2 தேக்கரண்டி

வெந்தயம் – 1 /2 தேக்கரண்டி

கருவேப்பிலை – 1 கொத்து

சோம்பு – 1 /2 தேக்கரண்டி

தேங்காய் – 4 தேக்கரண்டி

மிளகு – 1 தேக்கரண்டி

வரமிளகாய் – 2

பட்டை – 2

செய்முறை :

முதலில் முட்டையை வேக வைத்து தோலுரித்துக் கொள்ளவும். பின் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய் ஊற்றாமல் தனித்தனி யாக லேசாக வறுத்துக் கொள்ளவும்.

பிறகு வெங்காயம், இஞ்சி, பூண்டு முதலிய வற்றை சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கிக் கொள்ளவும். 

வதக்கிய பொருட்கள் அனைத்தையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,கருவேப்பிலை தாளித்து, தக்காளி சேர்த்து வதக்கவும். பின் அரைத்த மசாலா, உப்பு போட்டு வதக்கவும்.

தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக விடவும். பின் தேங்காயை அரைத்துக் கொள்ளவும். 

அரைத்த தேங்காய் ஊற்றி 2 நிமிடங்கள் வேக விடவும்.

பின் முட்டைகளை இரண்டு பக்கமும் லேசாகக் கீறி குழம்பில் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்கவும்.
Tags: