சில்லி கார்லிக் ஃபிஷ் ஃப்ரை செய்வது எப்படி?

சில்லி கார்லிக் ஃபிஷ் ஃப்ரை செய்வது எப்படி?

பொதுவாக மீன்கள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட கூடிய ஒரு உணவு பொருளாகும். சில உணவு பொருட்கள் ஆரோக்கியமாக இருந்தாலும் அதனை அதிகமாக சேர்த்து கொள்ளும் பொழுது நஞ்சாக மாறுகிறது.
சில்லி கார்லிக் ஃபிஷ் ஃப்ரை
பல ஆயிரம் வருடங்களாக நம்முடைய உணவில் ஒன்றாக இருக்கிற மீன்களில் புரதம், கால்சியம், மக்னீசியம், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், பாஸ்பரஸ் என மனிதர்களுக்குத் தேவையான ஏராளமான சத்துகள் அடங்கியுள்ளன. 

தவிர, மட்டன், சிக்கன் போல ஒரே விலை என்றில்லாமல் ஒவ்வொரு வகை மீனும் ஒவ்வொரு விலை என்பதால், எல்லாப் பொருளாதார நிலையில் இருப்பவர்களாலும் மீன்களை வாங்க முடியும். 

மீன் குழம்புக்காகவே வார இறுதி நாள்களை எதிர்பார்க்கிற மீன் பிரியர்கள் நம்மிடையே ஏராளம். மீன்கள் எப்போதுமே நல்லதுதான் என்றாலும் விரால் மீனுக்கு ஒரு தனிசிறப்பு உண்டு. 
இந்த மீனை அசைவ பிரியர்கள் வேண்டாம் என்று சொல்லவே மாட்டார்கள். அனைத்து அசைவ உணவுகளைவிட, கடல் உணவுகளில் எப்போதுமே சத்துக்கள் அதிகம். 

காரணம், சாச்சுரேட் கொழுப்பு இந்த மீன்களில் உள்ளதால் உடல் எடையை அதிகரிக்காது. மீன் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயம் குறைகிறது. 

நரம்புத்தளர்ச்சி நோயும் நீங்குகிறது. மீன் உணவு சாப்பிட்டால் மன அழுத்த நோய் வராமல் தடுக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

தேவையான பொருட்கள் :

மீன் - 600 கிராம் 

எண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன் 

ரெட் சில்லி - 6-8 

பூண்டு - 10 பல் 

வினிகர் - 1 டேபிள் ஸ்பூன் 

சோயா சாஸ்- 1 டீஸ்பூன் 

கார்ன் ஃப்லோர் - 2 டேபிள் ஸ்பூன் 

ரெட் க்லர் - பின்ச் உப்பு - தேவைக்கு 
செய்முறை :

மீனை இப்படி சுத்தம் செய்து கட் செய்து கழுவி நீர் வடிகட்டி வைக்கவும். காய்ந்த ரெட் சில்லி, பூண்டு வினிகர் சேர்த்து அரைத்து எடுக்கவும், சில்லி ப்ளேக்ஸ் இருந்தால் அதுவும் பூண்டு, வினிகர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். 

மீனோடு உப்பு, அரைத்த சில்லி பூண்டு விழுது, சோயா சாஸ், ரெட் கலர், கார்ன் ப்லோர், உப்பு சேர்க்கவும். நன்கு இவ்வாறு மிக்ஸ் செய்து வைக்கவும். 

பின்பு அதனை ஃப்ரிட்ஜில் அல்லது வெளியில் வைத்து குறைந்தது 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு ஒரு பேனில் 5 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மீனை போட்டு பொரிக்கவும். 

இப்படி சிவந்ததும் திருப்பி போட்டு மீண்டும் சிவற பொரித்து எடுக்கவும். சுவையான பூண்டு மணத்துடன் கூடிய சில்லி கார்லிக் ஃபிஷ் ஃப்ரை ரெடி.கிட்ட தட்ட தாய் ஃபிஷ் ஃப்ரை மாதிரி தான் இருக்கும்,

இது போல் ப்ரான் செய்தால் அசத்த லாக இருக்கும்.விரும்பினால் மீதியான எண்ணெயை மீன் குழம்பு செய்ய பயன்படுத்தலாம்.
Tags: