தக்காளி சாதம் செய்முறை / Tomato Rice Recipe !





தக்காளி சாதம் செய்முறை / Tomato Rice Recipe !

விருந்தின் போது ஸ்பெஷலாக ஒரு சாதம் தயாரிக்க விரும்பி னால் அதற்கு தக்காளி சாதமே ஏற்றது. சூடாக தக்காளி சாதம் தயாரித்து வெங்காய தயிர் பச்சடி யுடன் பரிமாறுங்கள்.

தக்காளி சாதம்

தேவையானவை :

பாஸ்மதி அரிசி – 2 டம்ளர் 

தக்காளி – கால் கிலோ 

வெங்காயம் – 2 

தேங்காய் – ஒரு மூடி 

பூண்டு – 10 பல் 

இஞ்சி – ஒரு சிறு துண்டு 

நெய் – அரை கப் 

புதினா – கைப்பிடி அளவு 

கொத்த மல்லி – கைப்பிடி அளவு 

பட்டை கிராம்பு ஏலக்காய் – தேவையான அளவு 

செய்முறை : 

மீடியம் சைஸ் குக்கரில் நெய்யை ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு வெடிக்க விடவும். இஞ்சி பூண்டு இரண்டையும் தட்டி வைத்துக் கொள்ளவும். 

நீள வாக்கில் வெங்காயம் பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.

தக்காளியை நறுக்கி தனியே வைத்துக் கொள்ளவும். புதினா, மல்லியை சுத்தம் செய்து கொள்ளவும். 

பட்டை கிராம்பு வெடித்ததும் வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு புதினா மல்லி எல்லா வற்றையும் போட்டு வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். 

இத்துடன் அரை டீஸ்பூன் மிளகாய்த் தூள், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும். 

ஒரு மூடி தேங்காயை மிக்சியில் அடித்து கையால் நன்றாகப் பிழிந்து 2, 3 தடவை பால் எடுக்கவும்.

பாலுடன் தண்ணீர் சேர்த்து 4 கப் அளந்து குக்கரில் விட்டு தாளித்த சாமான் களுடன் அரிசியையும் போட்டு உப்பு சேர்த்து நன்றாக கிளறி விடவும். 

குக்கரை மூடி ஆவி வந்ததும் வெயிட் போட்டு 2 சத்தம் வந்ததும் எடுத்து விடவும். 

சூடான தக்காளி சாதம் ரெடி. இறக்கி வைத்து பதினைந்து நிமிடங்கள் கழித்தே குக்கரை திறக்கவும். வெங்காய தயிர் பச்சடி யுடன் பரிமாற லாம்.
Tags: