தேவையானவை: 

கோதுமை மாவு – 2 கப், 

நெய் – ஒரு டேபிள் ஸ்பூன், 

உருளைக் கிழங்கு – 2, சீரகம், 

மிளகாய்த் தூள் – தலா ஒரு டீஸ்பூன், 

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், 

பச்சை மிளகாய், வெங்காயம் – தலா ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கவும்), 

எண்ணெய், உப்பு – தேவையான அளவு. 

செய்முறை: 

ஆலு ஸ்டஃப்டு சப்பாத்தி
வேக வைத்து, நன்கு மசித்த உருளைக் கிழங்கு, சீரகம், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், பச்சை மிளகாய், வெங்காயம், 

சிறிதளவு உப்பு ஆகிய வற்றை ஒன்றாக சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். 

கோதுமை மாவில் நெய், தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கிண்ணங் களாக செய்து, 

நடுவே உருளைக் கிழங்கு கலவையை வைத்து மூடி, சப்பாத்தி களாக திரட்டி, தவாவில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.