அருமையான ஸ்ட்ராபெர்ரி கேக் செய்வது எப்படி?





அருமையான ஸ்ட்ராபெர்ரி கேக் செய்வது எப்படி?

குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் போது அதிலும் பழவகைகளை கொடுக்கும் போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஸ்ட்ராபெர்ரி குழந்தைக்கு ஒவ்வாமை எதிர்வினையை உண்டாக்க செய்யும்.
அருமையான ஸ்ட்ராபெர்ரி கேக் செய்வது எப்படி?
குழந்தைக்கு 1 வயது ஆன பிறகு தான் ஸ்ட்ராபெர்ரி கொடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்படுகிறது.ஸ்ட்ராபெர்ரி வைட்டமின் சி நிறைந்தவை. இது சருமத்துக்கு நன்மை செய்யகூடும். 

நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்க கூடியது. குழந்தைகளுக்கு ஸ்ட்ராபெர்ரி அளிக்கும் நன்மைகள் அளவிட முடியாதது. இது நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கவும் கண் நோய்களை எதிர்த்து போராடவும் செய்யும்.

கால்சியம் மற்றும் பாஸ்பரஸின் நல்ல ஆதாரம் இது. எலும்பு வளர்ச்சிக்கு கால்சியம் இன்றியமையாதது. மேலும் இதயம், தசைகள், நரம்புகளின் சரியான செயல்பாட்டிற்கும் உதவுகிறது. 
பாஸ்பரஸ் செரிமானத்தை மேம்படுத்தலாம். செல்களை சரி செய்ய உதவும். புரதத்தை உடைக்க உதவும். மேலும் உடலில் பரவும் வேதியியல் எதிர் வினைகளை ஒழுங்கு படுத்துகிறது.

ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் அதிக உள்ள இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து கல்லீரலுக்கு சேதத்தை தடுக்கும். 

இதில் உள்ள ஃபோலேட் நல்ல ஆதாரம் குட. குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு ஃபோலிக் அமிலம் அவசியம். உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கும் இவை உதவுகிறது.

தேவையானவை: 

மைதா – 225 கிராம்

வெண்ணெய் – 225 கிராம்

ஐஸிங் சர்க்கரை – 225 கிராம்

முட்டை – 4

பேக்கிங் பவுடர் – ஒரு டீஸ்பூன்

வெனிலா எசன்ஸ் – 2 டீஸ்பூன்

உப்பு – அரை டீஸ்பூன்

செய்முறை: 

அருமையான ஸ்ட்ராபெர்ரி கேக் செய்வது எப்படி?
மைக்ரோ வேவ் அவனை 15 நிமிடங் களுக்கு 180 டிகிரியில் பிரீஹீட் செய்யவும்.மைதா, பேக்கிங் பவுடர், உப்பு மூன்றையும் சேர்த்துக் கலந்து சலித்து வைக்கவும்.

9 இன்ச் உள்ள பேக்கிங் பேனில் சிறிதளவு வெண்ணெய் தடவி கிரீஸ் செய்யவும்.
பைபாஸ் சிகிச்சைக்குப் பின் பின்பற்ற வேண்டிய சில வழிகள் !
ஒரு பாத்தி ரத்தில் மீதமிருக்கும் வெண்ணெயையும் ஐஸிங் சர்க்கரையையும் சேர்த்து, மிருதுவாகவும் நுரை வரும் வரையிலும் நன்றாக அடித்துக் கொள்ளவும்.

இத்துடன் முட்டைகளை உடைத்துச் சேர்த்து நல்ல கலவையாக வரும் வரை அடிக்கவும். வெனிலா எசன்ஸை சேர்த்துக் கலக்கவும். இனி, மைதா கலவையை கொஞ்சம் கொஞ்ச மாகச் சேர்த்து கட்டிகள் விழாமல் கலக்கவும்.

பிறகு வெண்ணெய் தடவிய கிரீஸ் கேக் பேனில் மைதா கலவையை ஊற்றி, கரண்டி யால் சமன் செய்யவும்.
அப்படியே அவனுக்கு மாற்றி மூடி, 20 முதல் 25 நிமிடங்கள் வரை 180 டிகிரியில் பேக் செய்யவும்.

25 நிமிடங்களுக்கு பிறகு அவனை திறந்து டூத்பிக்கை கேக்கின் நடுவே குத்திப் பார்த்தால், குச்சியில் மாவு ஒட்டாமல் சுத்தமாக வெளியே வர வேண்டும். அவனை அணைத்து கேக்கை வெளியே எடுத்து ஆற விடவும்.

இதற்கு ஐஸிங் செய்யும் முறை: 

தேவையானவை: 

குளிர வைக்கப் பட்ட க்ரீம் (விப்பிங் க்ரீம்) – 500 மில்லி 

ஸ்ட்ராபெர்ரி பழம் – 10 

சர்க்கரை – ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை: 

க்ரீமை ஒரு பவுலில் சேர்த்து முட்டை அடிக்கும் கரண்டியால் 15 முதல் 20 நிமிடங்களுக்கு நன்றாக அடித்துக் கொள்ளவும்.

ஸ்ட்ராபெர்ரி கேக்

ஸ்ட்ராபெர்ரி பழங்களை கையால் பிசைந்து பொடியாக நறுக்கி ஒரு பவுலில் சர்க்கரை யுடன் சேர்த்து, 15 நிமிடங் களுக்கு தனியாக வைத்தி ருக்கவும்.
அடித்த க்ரீமில் 200 கிராம் அளவு எடுத்து, ஸ்ட்ராபெர்ரி கலவையில் சேர்க்கவும்.
ஜலதோசம், மூக்கடைப்பு உடனடி நிவாரணம் !
அலங்கரி க்கும் முறை: 

ஆறிய கேக்கின் மீது அடித்து வைத்த ப்ளெயின் க்ரீமை எல்லா புறங்க ளிலும் படுமாறு நன்கு பரப்பி விடவும்.

இனி, கேக்கின் நடுவில் ஸ்ட்ராபெர்ரி - க்ரீம் கலவையை ஊற்றி, உங்கள் விருப்பத் துக்கு ஏற்ப ஸ்ட்ரா பெர்ரி வைத்து டெக்கரேட் செய்து பரிமாறவும்.

கேக்கை சுற்றி டாட்ஸ் போல க்ரீமில் வைக்க வேண்டும் என்றால், கூடுதலாக வைப்பிங் க்ரீம், சர்க்கரை, நசுக்கிய ஸ்ட்ராபெர்ரியை ஒன்றாக நன்கு அடித்து கலந்து பைப்பிங் பேக்கில் கலவையை ஊற்றவும். 

இதன் பிறகு, கேக்கை சுற்றி மேலே மற்றும் கீழே டாட்ஸ் வைக்கவும்.
Tags: