உருளைக்கிழங்கு பொடிமாஸ் செய்வது எப்படி?

உருளைக்கிழங்கு பொடிமாஸ் செய்வது எப்படி?

தேவையானவை  :
உருளைக்கிழங்கு – 4 

வெங்காயம் – 2 

பச்சை மிளகாய் - 3 

துருவிய தேங்காய் – ½ கப் 

கடுகு – 1 தேக்கரண்டி 

சீரகம் – 1 தேக்கரண்டி 

உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி 

கடலை பருப்பு – 1 தேக்கரண்டி 

பெருங்காயம் – ¼ தேக்கரண்டி 

உப்பு – தேவையான அளவு 

கறிவேப்பிலை – சிறிது 

எண்ணெய் 1 டீஸ்பூன் 

செய்முறை  :

உருளைக்கிழங்கு பொடிமாஸ் செய்வது எப்படி?
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்த பின் சீரகம், பெருங்காயம், 

கறிவேப்பிலை, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். 

பின்னர் தேங்காய் சிறிதளவு உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வறுக்கவும். 

இப்போது வேக வைத்த உருளைக் கிழங்கு சேர்த்து நன்கு கிளறவும். உருளைக் கிழங்கு பொடிமாஸ் தயார்.
Tags: