ஜில்லென்று பெப்பர் ஃபுரூட் சாட் செய்வது எப்படி?





ஜில்லென்று பெப்பர் ஃபுரூட் சாட் செய்வது எப்படி?

தேவையான பொருள்கள் : -
புளிப்பில்லாத கெட்டித் தயிர் - 3 கப் (துணியில் கட்டித் தொங்க விட்டு எடுக்கவும்),

நறுக்கிய வாழைப்பழம் - 1,

தோல் உரித்து நறுக்கிய ஆப்பிள் - 1,

மாம்பழம் - 1,

சர்க்கரை, உப்பு - தேவைக்கு,

சோளமாவு - 2 டேபிள் ஸ்பூன்,

பால் - 1 கப்,

சீரகத்தூள் - 1 டீஸ்பூன்,

கொர கொரப்பாக அரைத்த மிளகு - 1/2 டீஸ்பூன்,
நறுக்கிய (கொத்த மல்லித் தழை - 1 டீஸ்பூன், புதினா - 10 இலை),

எலுமிச்சைச் சாறு - 1/2 டீஸ்பூன்,

கருப்பு உப்பு - 1/4 டீஸ்பூன்,

சாட் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன்,

செர்ரி பழம் - அலங்கரிக்க.
செய்முறை :
ஜில்லென்று பெப்பர் ஃபுரூட் சாட் செய்வது எப்படி?
பாலை கொதிக்க விடவும். சோள மாவில் சிறிது தண்ணீர் கலக்கி கொதிக்கும் பாலில் சிறிய அளவாக சேர்த்து கட்டி 
விழாமல் கெட்டியான சாஸ் பதத்திற்கு வரும் வரை கிளறி, இறக்கி நன்றாக ஆற விடவும்.

உப்பு, மிளகு, சீரகம், சாட் மசாலா தூள் சேர்த்து கலக்கவும். மற்றொரு பாத்திரத்தில் நறுக்கிய பழங்கள், கருப்பு உப்பு, எலுமிச்சைச் சாறு, சர்க்கரை சேர்த்து கலக்கி வைக்கவும்.

பழங்களுடன், ஆறிய பால் கலவையை சேர்த்து கலக்கவும். வடிகட்டிய தயிரை நன்றாக கலக்கி சிறுசிறு அளவாக கொஞ்சம் கொஞ்சமாக பழக்கலவை யுடன் சேர்த்து 
கெட்டியான சாஸ் பக்குவம் வரும் வரை கலக்கவும். இனிப்பு சரி பார்த்து கொத்தமல்லி தழை, புதினா, சாட் மசாலாதூள், செர்ரி பழம் தூவி ஜில்லென்று பரிமாறவும்.
Tags: