மைதா  ஃப்ரூட் கேக் செய்வது எப்படி?





மைதா  ஃப்ரூட் கேக் செய்வது எப்படி?

இன்றைக்கு நாம் சாப்பிடக்கூடிய 80 சதவீத உணவுகளில் மைதா நிச்சயம் இடம் பெற்றிருக்கும். ரொட்டி, பிஸ்கட், புரோட்டா , பேக்கரி திண்பண்டங்கள் என அனைத்திலும் மைதா தான் பிரதானப் பொருளாக உள்ளது. 
மைதா  ஃப்ரூட் கேக்
ஆனால் இதை தொடர்ச்சியாக நாம் சாப்பிட்டு வரும் போது உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே தான் இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். 

குறிப்பாக ஊட்டச்சத்து நிபுணரான நூபுர் பாட்டீலின் கூற்றுப்படி, நீங்கள் ஒரு மாதத்திற்கு மைதாவை முழுவதுமாக கைவிடும் போது, உங்கள் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார். 
பொதுவாகவே சுத்திகரிக்கப்பட்ட மாவில் பெரும்பாலும் நார்ச்சத்துக்கள் மற்றும் ஊட்டச் சத்துக்கள் குறைவாக காணப்படும். இதனால் செரிமானப் பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. 

இதே போன்று மைதாவிலும் நன்கு சுத்திகரிக்கப்பட்ட மைதா மூலம் தயார் செய்யப்படும் உணவுப் பொருள்களை சாப்பிடும் போது செரிமானம் ஆகாமல் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும்.

தேவையானவை  :
மைதா – 250 கிராம்,

உப்பு சேர்க்காத வெண்ணெய் – 250 கிராம்,

பொடித்த சர்க்கரை – 250 கிராம்,

முட்டை – 6,

ஆரஞ்சு எசென்ஸ் – 2 டீஸ்பூன்,

ஆரஞ்சு கலர் – சிறிதளவு,

பேக்கிங் பவுடர் – 2 டீஸ்பூன்,

ஆரஞ்சு பீல் (பெரிய கடைகளில் கிடைக்கும்) – 50 கிராம்,

துருவிய ஆரஞ்சுப் பழத்தோல் – 1 டீஸ்பூன்,

சூடான பால் – 2 கப்,

ஆரஞ்சு பழச்சாறு – 1 கப். 

செய்முறை  : 
வெண்ணெய், சர்க்கரை, எசென்ஸ், கலர் சேர்த்து நுரைக்க அடிக்கவும். மைதா, பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்துக் கொள்ளவும். ஆரஞ்சு பீலைத் துண்டு துண்டாக நறுக்கி, மைதா வுடன் கலக்கவும். முட்டையை நுரைக்க அடிக்கவும்.

நுரைக்க அடித்த முட்டையை, சர்க்கரை, வெண்ணெய்க் கலவை யுடன் சேர்த்து அடிக்கவும். ஆரஞ்சு தோலையும் சேர்த்து அடிக்கவும்.
இத்துடன் மைதா கலவை, ஆரஞ்சு பழச்சாறு, சூடான பால் அனைத் தையும் சேர்க்கவும். மாவைத் தளர்வாக தோசை மாவு பதத்துக்கு திரட்டி, 180 டிகிரி சென்டி கிரேடில் பேக் செய்யவும்.
Tags: